புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2021)

ஏதேனின் மேன்மை

ஏசாயா 51:3

அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்;


ஒரு ஊரிலே இருந்த பெரிதான மாளிகையைச் சூழ கனி தரும் மரங்க ளும், அழகான மலர்களும் வளர்ந்திருந்தது. பார்வைக்கு பச்சபசேல் என்று அவை பசுமையாக காணப்பட்டது. ஆனால் அந்த மாளிகை அழகாக காட்சியளிப்பதினால் மட்டும், அந்த மாளிகைக்குள் சமாதானம் இருக்கும் என்று கூறிவிடமுடியுமா? ஆதாம் ஏவாள் வாழ்ந்து வந்த ஏதேன் தோட்டத்தைக் குறித்து நாம் அதிகமாக பேசுவதுண்டு. ஏதேனின் மேன்மை என்ன? அதன் மரங்க ளும், கனிகளும், மலர்களுமோ? அவை மட்டுமல்ல அவைகளை விட மேன்மையானவைகள் அங்கே இருந்து. அவர்கள் தேவ சாயலு டையவர்களாக இருந்தார்கள். பாவமறியாதவர்களாக வாழ்ந்தா ர்கள். அவர்கள் மத்தியிலே தேவன் இருந்தார். தேவனுடை சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து, பிசாசான வனுடைய சத்தத்திற்கு கீழ்படிந்ததால், தேவன் கொடுத்த சமாதானமான வாழ்வை இழந்து போனார்கள். தேவனோடு வாழாத வாழ்க்கை எதற்கு ஒப்பனையாக கூறப்படுகின்றது? அது வரண்ட வனாந்திரத்தைப் போல வும், முட்செடிகள் வளரும் பாழான நிலத்தைப் போலவும் காணப்படும். இந்த உலகத்திலே மனிதர்களுடைய வாழ்க்கை வனாந்திர வழிபோல் சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது. ஆனால் ஒரு மனிதன் தேவனோடு வாழ்பவனாக இருந்தால், அவன் வாழ்வு ஏதேன் போல மாற் றப்படும். நாம் இந்த உலகத்திலே இருக்கும் வரை, வெளிலே இந்த உலகத்தின் தீமைகளைக் காண்கின்றோம். இந்த உலகத்திலே உபத்திர வங்கள் உண்டு. எனினும், நாம் பிரதியட்சமாக முகமகமாய் கர்த்தரை தரிசித்து அவரோடு நீடுழியாய் வாழும் நாள் வரும். அந்த நாள் வரை க்கும், நாம் தேவனோடு வாழும் வாழ்க்கையை நமக்கு ஏற்படுத்திக் கொடுதிருக்கின்றார். நாம் தேவன் தங்கும் ஆலயமாக இருக்கின்றோம். அவர் நமக்குள்ளே வாசம் செய்து, வறண்ட வாழ்க்கையை ஏதேனைப் போல மாற்றுகின்றார். அந்த அனுபவத்தை, சந்தோஷத்தை, நிம்மதியை அவர் கட்டளையிடுகின்றார். அவருடைய வார்த்தையை தள்ளிவிட்டதால் ஆதாம் ஏவாள் அந்த வாழ்வை இழந்து போனார்கள். ஆனால் நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கைக்கொள்ளும் போது, இழந்து போன ஏதேன் அனுபவத்தை நாம் நம் வாழ்வில் கண்டு கொள்ளலாம்.

ஜெபம்:

வறண்ட வாழ்க்கையை செழிப்பாக மாற்றும் தேவனே, உம்மு டைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்பதினால் உண்டாகும் சமாதானத்தை உணர்ந்து கொள்ளும் பாக்கியத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 36:35