புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 13, 2021)

பாவிகளுக்கு புகலிடமானவர்

லூக்கா 5:32

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.


ஒரு குறிப்பிட்ட நாட்டிலே ஏற்பட்ட யுத்தத்தினால், அந்த நாட்டின் பொரு ளாதாரம் வீழ்ச்சி கண்டது. அதனால், அந்ந நாட்டிலே, களவு, கொள்ளை மற்றும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நாட்டி லுள்ள ஜனங்கள் மிகவும் கஷ;டப்பட்டதால், இன்னுமொரு தேசமானது தன் வாசலைத் திறந்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டது. அக திகளாக வந்தோர்க்கு, அந்த தேசத் திலே நல்வாழ்வை கண்டடையும் எல்லா வசதிகளும் இலவசமாக வழ ங்கப்பட்டது. அந்த தேசத்தின் குடியு ரிமையை பெற்றுக் கொள்ளும் வழி களும் ஏற்படுத்தப்பட்டது. அப்படியி ருந்தும், அகதிகளாக வந்தோர்களில் சிலர், தங்கள் நாட்டில் செய்த பிரகாரமாக களவு, கொள்ளை மற்றும் வன்முறைகளைவிட்டுவிட மனதில்லாதவர்களாக இருந்தார்கள். அத னால் அவர்கள் அந்த தேசத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்ப ட்டார்கள். தேசத்தின் அதிகாரிகள் அவர்களை நோக்கி: நல்வாழ்வு வாழும்படி நாங்கள் அகதிகளுக்கு தஞ்சம் கொடுக்கின்றோம் ஆனால் அவர்களுடைய துன்மார்க்கமான நடவடிக்ககைகளுக்கு நாம் தஞ்சம் கொடுப்பதில்லை. அப்படியான நடவடிக்கைகள் இங்கு ஏற்றுக் கொள்ள ப்படாது என்று கூறினார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு அநியாயயமாக வரி வசூலிப்பவர்களுடனும், பாவிகளுடனும் விருந்து உண்ணும் போது, யூத மதத் தலைவர்களில் சிலர் அவரை கடிந்து கொண்டார்கள். ஆண்டவர் இயேசு அவர்களை நோக்கி: பிணியாளி களுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்பு கிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். ஆம், ஆண்டவர் இயேசு பாவி களுக்கு புகலிடமாக இருக்கின்றார் ஆனால் அவர் பாவங்களுக்கு புகலிடம் கொடுப்பதில்லை. இனி வாழ்விற்கு வழியில்லை என்று பாவத்தில் மூழ்கியிருக்கும் பாவிகளுக்கும் அவர் விடுதலை கொடு க்கின்றார். ஆனால் இனி பாவம் செய்யாதே என்று எச்சரிக்கின்றார். பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கான வழிமுறைகளை ஏற்படுத்தியிரு க்கின்றார். நமக்கு துணையாக இருக்கும்படிக்கு தேவ ஆவியானவரை ஈவாக கொடுத்திருக்கின்றார். எனவே தேவன் கொடுத்திருக்கும் கிருபை யின் நாட்களை பிரயோஜனப்படுத்த வேண்டும். பாவங்களுக்கு உங்கள் இருதயங்களை புகலிடமாக்காதிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு அழைத்த தேவனே, நான் விட்டு வந்த பொல்லாத வழிகளுக்கு திரும்பாதபடிக்கும், அவைகளை நியாயப் படுத்தாதபடிக்கும் என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 3:16