புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 12, 2021)

தேவனுடையது தேவனுக்கு...

மாற்கு 12:17

இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.


ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, ரோமர்கள் யூதருடைய தேசத்தை ஆட்சி செய்து வந்தார்கள். ரோமரு டைய சக்கரவர்த்தி இராயன் என்று அழைக்கப்பட்டான். யூதர்களில் அநேகமானோர், ரோமரையும் அவர்களுடைய வழிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருந்தார்கள். அந்நாட்களிலே, யூத மதத் தலைவர்களில் சிலர், ஆண்டவரா கிய இயேசுவின் பேச்சிலே அவரை குற்றம்பிடிக்கும்படிக்கு, தங்களில் சிலரையும், இராயனைப் பிற்றபற்று கின்றவர்களில் சிலரையும் அவரிட த்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, ரோமருடைய இரா யனுக்கு வரிகொடுக்கிறது நியாய மானது அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்;. அதற்கு அவர்கள் இராயனுடையது என் றார்கள். அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனு டையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். இந்த உலகத்திலே நாம் வரிகளையும் நிலுவைகளையும் செலுத்தி வருகின்றோம். அதிகார ங்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தை நாம் கிறிஸ்துவினிமித்தம் கொடுக்க வேண்டும் என்று கடந்த நாட்களிலே தியானித்தோம். இவை மனிதர்களுக்குரியவைகள். தேவனுக்குரியவைகள் எவை? பூமியின் அதின் நிறைவும் அதன் குடிகளும் கர்த்தருடையவைகள். இந்த உலகப் பொருட்களால் கர்த்தரை பிரியப்படுத்த முடியுமோ? நாம் காணும் வானமும் பூமியும் ஒருநாள் ஒழிந்து போகும். இந்த உலகத்திற்குரிய ரூபம் பொறிக்கப்பட்டது இந்த உலகத்திற்குரியது. அப்படியானால், தேவனுடைய ரூபம் எங்கே பொறிக்கப்பட்டிருக்கின்றது. மனிதன் தேவ னுடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் சிருஷ;டிக்கப்பட்டான். நாம் தேவனுடையவர்களாக இருக்கின்றோம். நாமே அவர் தங்கும் ஆல யமாக இருக்கின்றோம். தேவனுடையவர்கள் தேவனுடைய சத்தத்தை கேட்கின்றார்கள். எனவே, நம்மை நாம் முழுமையாக தேவனிடத்தில் ஒப்படைக்க வேண்டும். நம்முடைய இருதயத்தை தேவனுக்கு உகந்த காணிக்கையாக நாம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

தேவ சாயலாகும்படிக்கு என்னை அழைத்த தேவனே, நான் உம்முடைய சாயலிலே நாள்தோறும் வளரும்படிக்கு என்னை முழுமையாக உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 6:19