புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2021)

வார்த்தையின் வல்லமை

சங்கீதம் 19:11

அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.


ஒரு ஊரின் விவசாய திணைகளத்தினாலே அவ்வூரின் குடிமக்களுக்கு தோட்டம் செய்வதற்காக நல்ல விதைகளானது இலவசமாக விநியோ கிக்கப்பட்டது. அந்த ஊர் மக்களில் சிலர், தங்கள் தோட்டத்தின் நில த்தை நன்கு பண்படுத்தி விதைகளை விதைத்தார்கள். வேறு சிலரோ, விதை இலவசமாக தருகின்றார்களே என்பதற்காக அதை வாங்கி, தோட்டத்தின் நிலத்தை நன்றாக பண்படுத்தாமல் அதே விதைகளை விதைத்தார்கள். விநியோகிக்கப்பட்ட விதைகள், எந்த தோட்டத்திலே நன் றாக விளையும்? நன்கு பண்படுத்தப் பட்ட நிலத்தில் அல்லவா? கர்த்தரு டைய வார்த்தையானது விதைக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரு வேளை இந்த உலகத்திலே விநியோகிக்கப் படும் பயிரினங்களின் விதைகள் குறை வுள்ளதாக இருக்கலாம் ஆனால் கர்த்தருடைய வார்த்தையானது சம்பூ ரணமானது. ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது. சத்தியமுள்ளது. பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது ஜீவ னும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டய த்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களை யும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத் தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக் கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேச த்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப் பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. அருமருந்தும் ஒளஷதமுமாக தேவனுடைய வார்த்தையானது, பாவத்தை பாவம் என் றும், நீதியை நீதியென்றும், அநீதியை அநீதியென்றும் வகையறுக் கின்றது. நம்மைத் தேற்றும் தேவ வார்த்தையானது, அவ்வப்போது நம்மைக் கண்டித்து தண்டித்து சீர்திருத்துவதற்கு வல்லமையுள்ளதாக இருக்கின்றது. ஆனால், தன் இருதயமாகிய நிலத்தை நன்கு பண்ப டுத்தி வைத்திருக்கின்றவனுடைய வாழ்விலே அந்தக் கண்டிப்பும், தண் டிப்பும், சீர்திருத்தலும் பலன் கொடுக்கின்றதாக இருக்கின்றது. எனவே உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதற்கு இடங் கொடு ங்கள். உங்கள் இருதயம் தேவனுடைய வார்த்தை விளையும் பண்ப டுத்தப்பட்ட நிலமாக இருப்பதாக.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி குணமாக்கும் தேவனே, உம்முடைய வார்த்தையின் வழியாக நான் சீர்திருத்தம் அடைவதற்கு, வார்த்தையின் எச்சரிப்பை தாழ்மையோடு ஏற்றுக் கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:12