புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2021)

தேவனுடைய வீட்டார்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூர ணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்க தாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


இந்த உலகமும் அதன் முறைமைகளும் நமக்கு வழிப்போக்கனைப் போலவும், நாம் இந்த உலகத்திற்கும் அதன் முறைமைகளுக்கும் வழிப்போக்கரைப் போலவும் இருக்கின்றோம். நிலையான நகரம் நமக்கு இந்த பூமியிலே இல்லை என்பதை நாம் ஒவ்வொரு நாளும் அறிக்கையிட வேண்டும். தேவனுடைய வீட்டாராக அழைப்பை பெற்றிருக்கும் நாம், இந்த உலகத்தின் போக்கிற்கு அந்நியரும் பரதேசிகளுமாக இருக்கின்றோம். (எபேசியர் 2:11, 1 பேதுரு 2:11) அவைகள் நம்மில் தங்குவதற்கு நாம் இடங் கொடுக்கக் கூடாது. கொஞ்சம் புளித்த மாவானது பிசைந்த மா முழுவதையும் உப்பப் பண்ணுவது போல, இந்த உலகத் தின் ஆசை நம் பரலோக பிரயாண த்தில் பெரும் நோவுகளை உண்டு பண்ணுவதோடு, அவை நம் ஆத்துமாவை கெடுத்துப் போடும். நாம் பரலோக யாத்திரிகளாக இருந்தால், இந்த உலகத்திலே நாம் இழந்து போக வேண்டிய பொருட்கள், உறவு கள், நட்புகள் உண்டு. நாம் இப் போது காணும் உலகமும் அதன் இச்சைகளுக்கும் பிசாசானவனே எஜமானனாக இருக்கின்றான். இரையைத் தேடிச் செல்லும் மீனானது, தனக்கு பிடித்த இரையை கண்டு கொண்டதும், அந்த இரையானது தூண்டில் வழியாக தனக்கு போடப்பட்டிருக்கும் கண்ணி என்பதை உணராமல் அதை கவ்விக் கொண்டதால் கண்ணியிலே அகப்பட்டுக் கொண்டது. இந்த உலகத் திலே கொஞ்சக் காலம் வாழும் நமக்கும், உயிர் வாழ்வதற்குரிய தேவை கள் பல உண்டு. இந்த உலகதிற்கு வழிபோக்கர்களாக இருக்கும் நாம், இந்த உலகத்திலே நம்முடைய பார்வைக்கு இன்பமாக இருப்பவைகளை ஆராய்ந்தறியாமல் அவைகளைப் பற்றிக் கொள்ளக் கூடாது. கர்த்தருடைய வார்த்தையானது நாம் மரணக் கண்ணிகளிலே சிக்கிக் கொள்ளாதபடிக்கு நம்மை எச்சரித்து நடத்துகின்றது. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே உலகப் போக்கிற்கு விலகி உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, பெரிதான அழைப்பைப் பெற்ற நான், இந்த உலகத்திற்குரிய காரியங்களை உம்முடைய வார்த்தையின் வழியாக அறிந்து விலகியோட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங் 119:54