புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 08, 2021)

வழிப்போக்கன்

மத்தேயு 13:43

நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.


ஒரு குறிப்பிட்ட ஊரை கடந்து கொண்டிருக்கும் ஒரு வழிப்போக் கனானவன், சாயங்காலமானதால், அந்த ஊரிலுள்ள தங்கும் விடுதி யொனறில் இரவைக் கழித்தான். அதிகாலையிலே இருட்டோடே எழு ந்து அவன் தன் வழியே போய்விட்டான். இதற்கொத்ததாகவே நமக்கு உண்டாகும் துன்பமும் ஒரு வழிப்போக்கனைப் போல இருக்கின்றது. சில வேளைகளிலே அழுகையின் பள்ளத்தாக்கைப் போன்ற அனுபவ த்தை நாம் கடந்து செல்வதுண்டு. அந்த நோவுகள் நம்முடைய வாழ் வில் நிரந்தரமானவைகள் அல்லவே. இரவுக்கு விடியல் ஒரு எல்லையாக இருப்பது போல், நம்முடைய கண்ணீ ருக்கும் கர்த்தர் எல்லையை வைத்தி ருக்கின்றார். அவரிலே பெலன் கொண்டு, அவர் காட்டும் செவ்வை யான வழியை தங்கள் இருதயத்தில் கொண்டிருக்கின்றவர்கள், அழு கையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள் ளுகிறார்கள். மாலையிலே அழுகையோடு நித்திரைக்கு செல்கின்ற வர்கள், கர்த்தருடைய புதுக் கிருபையினாலே காலையிலே மகிழ்ச்சிய டைகின்றார்கள். முன்னோடிகளான பரிசுத்தவான்களில் சிலர், நிந்தைக ளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட் டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறி யாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித் தார்கள்;. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புக்களிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். அப்படியானால், அவ ர்கள் யாவரும் தங்கள் வாழ்வில் விடியலைக் காணாமல் மரணத்தை சந்தித்தார்களா? அப்படியல்ல, சாயங்காலத்திலே நாம் நித்திரைக்கு செல்வதைப் போல, நீதிமான்களாகிய அவர்கள் உபத்திரவங்களோ டும், கண்ணீரோடும் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். அவர்கள் தேவசந்நிதியிலே மகிழ்ச்சியோடு எழுந்திருப்பார்கள். நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே வழிப்போக்கனைப் போல கடந்து போகும் துன்பத்தைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, ஒரு இரவைப் போல கடந்து போகும் இந்த வாழவின் துன்பங்களைக் கண்டு நான் சோர்ந்து போகாமல், உம்முடைய தயவினால் உண்டாகும் நீடிய வாழ்வை பெற்றுக் கொள்ள வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 30:5