புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2021)

சரீரம் ஒன்றே

1 கொரிந்தியர் 12:20

அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.


'நான் ஒரு சிரேஷ;ட அரசாங்க உத்தியோகத்தன். எனவே, எனக்கு நாட் டின் அடையள அட்டை தேவையில்லை, சாரதி லைசன்ஸ் அவசியமி ல்லை. நாட்டுச் சட்டங்கள் எனக்குத் தேவையில்லை' என்று ஒருவரும் கூற முடியாது. அந்த நாட்டிலே அவன் எப்படிப்பட்ட உத்தியோகத்த னாக இருந்தாலும் ஒரு நாட்டின் பிரஜையின் கடமைகளையும் பொறுப்பு க்களையும், அந்த நாட்டின் சட்டதிட்ட ங்களுக்கமைய செய்து வரவேண் டும். அழைப்பையும் தெரிந்து கொள் ளுதலையும் பற்றி நாம் பேசும் போது, முதன்மையாக நாம் யாவரும் நித் திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்றவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஊழிய ர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும் நாம் ஒவ்வொரு வரும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படிக்கு, நம் வாழ்விலே நம்மை நோக்கி வரும் சவால்களை, தேவன் தரும் பெலத்தால் நாம் ஜெயம் கொள்ளும்படிக்கு விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராட வேண்டும். அநேகராகிய நாம் கிறிஸ்துவின் ஒரே சரீரமாயும், தனித் தனியே அவயவங்களாயுமிருக்கின்றோம். தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் கிறிஸ்துவின் சரீரத்திலே வைத்தார். அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. நன்றாக கவனித்து தியானம் செய்யுங்கள். நாம் 'கிறிஸ்துவுக்குள்' ஒரே சரீமாக இருக் கின்றோம். எனவே நாம் 'கிறிஸ்துவுக்குள்' இருந்தால், அவர் பரிசுத் தராக இருப்பது போல நாமும் பரிசுத்தராக இருக்க வேண்டும். நம்மு டைய கிரியைகள் அவருடைய கற்பனைகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் சுபாவங்களை தரித்தவர்களாக வாழ வேண் டும். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம், தீர்க்கதரிசனம், ஊழியம், போதனை செய்தல், புத்தி புகட்டுதல், இரக்கங் காட்டுதல் போன்ற வௌ;வேறான வரங்க ளையுடையவர்களாக இருக்கின்றோம். 'நான் தானதர்மம் செய்ய அழை க்கப்பட்டேன் எனவே நான் ஜெபிக்கத் தேவையில்லை, வேதம் வாசி க்கத் தேவையில்லை, சபை ஐக்கியத்திலே இணைந்திருக்கத் தேவை யில்லை' என்று எண்ணுவது மிகவும் தவறானது. நித்திய ஜீவனு க்கென்று பெரிதான அழைப்பை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாம், தனித்துவமான வரங்களைப் பெற்றிருந்தாhலும், கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருக்கின்றோம் என்பதை மறந்து போகாமல், தாழ்மையுள்ள வர்களாக முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, நீர் எனக்கு கொடுத்த வரத்தின்படி, கிறஸ்துவின் திருச் சரீரத்தின் அவயவமாக, எனக்கு கொடுக்கப்பட்டதை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:18-20