புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2021)

என்னிடத்தில் நன்மை உண்டு

ரோமர் 12:3

அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.


ஐயா போதகரே, பல தசாப்தங்களாக ஊழியம் செய்து வந்தீர்களே, உங்களுடைய ஊழிய நாட்களிலே அநேக ஆத்துமாக்களை நீங்கள் ஆதாயப்படுத்தியிருக்கின்றீர்கள். உங்கள் ஊழியமும் பெரிதான வளர் ச்சியைக் கண்டது. அதன் இரகசியம் என்ன என்று ஒரு வாலிபன், ஊழி யப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற் றிருக்கும், நன்கு வயது முதிர்ந்த போதகரிடம் கேட்டான். மகனே, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்க ளைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கி றார்;. எவர்களை முன்குறித்தாரோ அவ ர்களை அழைத்துமிருக்கிறார்; எவர் களை அழைத்தாரோ அவர்களை நீதி மான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இது தேவனுடைய அநாதி தீர்மானம். விதைப்பில்லாமல் அறுப்பு இல்லை. விதைத்தால் மட்டும் போதாது, அதற்கு நீர்பாய்ச்சுகின்றவர்கள் அவசி யம். தேவனோ விளையச் செய்கின்றார். தமக்கு சித்தமானவர்களை அறுவடைக்கு அனுப்புகின்றார். இந்த பட்டணத்திலே இயேசு என்ற நாமத்தை மனிதர்கள் அறியாது இருந்த நாட்களிலே, பல சிரமங்கள் மத்தியிலே தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், முன்னோடிகளாக வந்த மிஷனரிகள், தேவனுடைய வார்த்தையை விதைத்தார்கள். சிலர் நற்செய்திக்காக இரத்த சாட்சிகளாக மரித்திருக்கின்றார்கள். தேவன் குறித்த காலம் நிறைவேறிய போது, தகுதியற்ற என்னை அவர் அறுவ டைக்கு ஒரு கருவியாக உபயோகித்தார். இவை யாவும் தேவனுடைய ஏற்பாடும், அவருடைய அனுக்கிரகமுமாயிருக்கின்றது. இதில் மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை என்று பதில் கூறினார். பிரியமானவ ர்களே, கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் தாலந்துகளையும், பொறுப்புக் களையும் குறித்து நாம் பெருமை கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று சிலர் அறியாமையினாலே, தங்கள் கிரி யையினால் உண்டாகும் பலன் தங்கள் பிரயாசமே என்று எண்ணிக் கொள்கின்றார்கள். தங்களை குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணிக் கொள்கின்றார்கள். தேவனுடைய அநாதி திட்டத்திலே தாங் கள் ஒரு சிறிய பங்கு நம்மிடத்தில் ஏதாவது நன்மை உண்டாயிருந்தால் அது பரலோகத்திலுள்ள தேவனால் உண்டான ஈவு என்பதை உணர்ந்து தேவ சமுகத்திலே நம்மைத் தாழ்த்த வேண்டும்.

ஜெபம்:

கிருபையினாலே என்னை இரட்சித்த தேவனே, நீரே நன்மையின் ஊற்று. உம்மையல்லாமல் நான் ஒன்றும் செய்யமுடியாது என்பதை எப்போதும் உணர்ந்தவன(ளா)க இருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 3:6-8