புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2021)

செம்மையான வழியிலே நடத்தும்

சங்கீதம் 143:10

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.


'நான் வெகுவாய் ஒடுக்கப்பட்டிருக்கின்றேன். என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. என் பெலவீனங்கள் என்னை நெருக்குகின்றது. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமா யிற்று. தேவனை நோக்கிப் பார்க்க எனக்கு பெலனில்லை. எந்த முகத் தோடு தேவனுடை சமுகத்திற்கு செல்வேன்' என்று ஒரு மனிதனானவன் தன் நிலைமையைக் குறித்து தனக்குள் வருந்திக் கொண்டிருந்தான். இந்த நிலைமையிலே தன் அறைவீட் டிற்குள் முடங்;கிப் போயிருக்கும் அவன் செய்யக்கூடிய காரியம் என்ன? மேலே அவன் தனக்குள் கூறிக் கொண்ட வார்த்தைகளுக்கு முன்ன தாக, 'அன்புள்ள பரம பிதாவே' என்ற வார்த்தையை கூறி, தன் உண்மை நிலையை அவருக்கு தெரியப்பட டுத்த வேண்டும். ஒரு சமயம், ஆண்ட வராகிய இயேசு, தங்களை நீதிமா ன்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த மனிதர்களை நோக்கி: பிணியாளிக ளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். அதாவது சிலர் தாங்கள் தூய்மையானவர்கள், பாவம் இல்லாதவர்கள் என்றும் தங்களை தாங்களளே நீதிமான்கள் என்று எண்ணி தாங்கள் போட்டுக் கொண்ட வட்டத்திற்குள் வாழ்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், பாவத்திலே தவித்துக் கொண்டு விடுதலையடைய முடியாமல் இருக்கும் மனிதர்கள் அழிந்து போகும்படியாக விரும்புகின்றார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசுவோ ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி யாவரையும் தம்மிடத்திலே அழைக்கின்றார். பாவிகள் தொடர்ந்து பாவத்தில் வாழும்படிக்கு அல்ல தேவ ஆவியானவரின் துணையோடு செம்மையான வழியிலே நடக்கும்படி அவர்களுக்கு வழிகாட்டுகின்றார்;. ஒருவேளை நீஙகள் இப்படிப்பட்ட சூழ்நிலையிலே அகப்பட்டு, உங்கள் அக்கிரமங்கள் உங்கள் தலைக்கு மேலாகப் பெருகியிருந்தால். இன்று, உங்களைத் தாழ்த்தி, தேவனை நோக்கி ஜெபம் செய்யுங்கள். உங்கள் உண்மை நிலையை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். பரிசுத்த ஆவி யானவர் உங்களை செம்மையான வழியிலே நடத்தும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரம பிதாவே, என் நிலையை அறிந்தவரே. உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை எல்லா இடுக்கண்ணிற்கும் நீங்கலாக்கிவிடும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 5:31-33