புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 03, 2021)

அடியேனை நியாந்தீர்க்காதிரும்

சங்கீதம் 143:2

ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.


ஒரு கிராமமொன்றிலே வசித்து வந்த வாலிபனொருவன், தன் நண்பர் களோடு சேர்ந்து ஒரு குற்றச் செயலைலொன்றைச் செய்த் போது அந்த கிராமத்தின் மனிதர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனைக் குறித்த காரியத்தை ஆராய்தறிந்து அவனுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதற்காக அந்தக் கிராமத்தின் மூப்பர்கள் கூடி வந்தி ருந்தார்கள். அந்த வேளையிலே அந்த வாலிபனுடைய தாயார், மூப் பர் சங்கத்திலுள்ளவர்களை நோக்கி: ஐயா பெரியவர்களே, என்னுடைய மகனுடைய விஷயத்திலே அவனு டைய குற்றத்தின்படி அவனை கடு மையாக தண்டியாமல், அவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை கொடுக்கும்படி உங்களது கருணையைக் காண்பிக்க வேண்டுகின்றேன் என்று பணிவோடு வேண்டிக் கொண்டாள். இந்த உலகிலே வாழும் மனிதர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லும் போது, சில வேளைகளிலே, குற்றம் செய்தவர்கள்கூட தங்களை நிரபராதிகள் என்றும், வேறு சிலர் குற்றம் செய்யாதவர்களை குற்றவாளிகள் என்று எதிர்த்தும் வாதம் செய்கிதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்த உலகிலே யார் நீதியுள்ளவர்கள்? யார் அநீதியுள்ளவர்கள் என்று வரை யறுக்கும்படி சட்டங்கள் உண்டு. ஆனால் நீதியுள்ள நியாயாதிபதியாகிய தேவனாகிய கர்த்தரின் முன்னிலையில் யார் தன்னை நீதிமானாகக் கருத முடியும்? (சங்கீதம் 7:11). தேவனுக்கு முன்பாக, எங்களுடைய நீதி களெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, (ஏசாயா 64:6). அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. உணர்வுள்ளவன் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழிதப்பி, ஏக மாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனா கிலும் இல்லை (ரோமர் 3:10-12). தேவ கிருபையினாலே இரட்சிக்க ப்பட்டு, விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றோம். தேவ னுடைய சந்நிதியிலே நம்முடைய கிரியைகளைக் குறித்து மேன்மை பாராட்ட நமக்கு இடமில்லை. எனவே தாவீது ராஜா தனக்கு ஏற்பட்டிரு க்கும் இடுக்கண் வேளையிலே, தேவன் முன்னிலையிலே தன்னைத் தாழ்த்தி, கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்க ளுக்குச் செவிகொடும் என் நீதியின் நிமித்தமல்ல, உம்முடைய கிரு பையின் நிமித்தம் என்னை கண்ணோக்கியருளும் என்று விண்ணப்பம் செய்தார். அதுபோலவே நாமும் நம் நெருக்கத்தில் தேவ சமுகத்திலே நம்மைத் தாழ்த்தி அவருடைய இரக்கத்தை நாடுவோம்.

ஜெபம்:

என் புகலிடமான தேவனே, என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என்னுடைய கிரியைகளின்படி நீர் எனக்கு சரிக்கட்டாமல், உம்முடைய கிருபையின்படி என்னை கண்ணோக்கிப் பார்த்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 5:1-2