புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2021)

பேர் சொல்லி அழைத்த தேவன்

ஏசாயா 43:1

பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழை த்தேன்; நீ என்னுடையவன்.


தேவனுடைய ஜனங்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், பல ஆண்டு காலமாக தங்களை அழைத்த சர்வ வல்லமையுள்ள தேவனை மறந்து போனார்கள். தங்களுக்கு தாபரமாக இருந்து வந்த உன்னதமான தேவடைய வாழ்வுதரும் ஜீவனுள்ள வார்த்தைகளை அற்பமாக எண்ணி, உயிரற்ற விக்கிரகங்களை நோக்கிப் பார்த்தார்கள். அவர்களுடைய கடின மான இருதயத்தினாலும், பொல்லாத வழிகளினாலும், அவர்கள் அடிமைத் தனத்திற்குட்படுத்தப்பட்டார்கள். உன் னதமான தேவனின் கோபம் அவர்கள் மேல் பற்றியெரிந்தது. யார் அவர் களை சர்வ வல்லமையுள்ள தேவனு டைய கைக்கு தப்புவிக்கக் கூடும்? ஒருவராலும் கூடாது. ஆனால், கிருபை நிறைந்த தேவன் அவர்கள்மேல் மனதுருகினார். பல ஆண்டு காலமாக பாவத்தில் வாழ்ந்திருந்தும், தங்கள் பொல்லாத வழிகளிலி ருந்து மனம்திரும்பி, தேவனை நோக்கி பார்த்த போதெல்லாம், அவர் மனதுருக்கமுள்ளவராக இருக்கின்றார். இவ்வண்ணமாக அவர் நெருக்க த்திலிருக்கும் தம்முடைய ஜனங்களை நோக்கி: உன்னைச் சிருஷ;டித் தவரும், உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் என்றார். நம்முடைய வாழ்விலும் இக்கட்டும் நெருக்கங்களும் ஏற்படுவதுண்டு. சில வேளைகளிலே தேவ னுடைய வார்த்தையை கேளாதபடிக்கு நம்முடைய செவிகளை நாம் அடைத்துவிடுவதுண்டு. இதனால் தம்முடைய மிகுந்த கிருபையினாலே நம்மை இரட்சித்த தேவனை மறந்து, கண்போன போக்கிலே நடந்து பல கண்ணிகளுக்குள் சிக்கி, நம்முடைய வாழ்விலே பல இன்னல் களையும், துன்பங்களையும் வரவித்துக்கொள்கின்றோம். அந்த வேளை களிலே, நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, நம்முடைய பாவ வழிகளிலிருந்து மனந்திரும்பி, அவரை நோக்கிப் பார்க்கும் போது: நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக் கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக் கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது என்று கூறிய தேவன், நம்மை நம்முடைய எல்லா இடுக்கண்களிலிருந்து விடுதலையாக்கி, தீமைகளை நன்மைகளாக மாற்றி நம்மை நடத்திச் செல்வார்.

ஜெபம்:

என்னை பேர் சொல்லி அழைத்த தேவனே, உம்மைவிட்டு விலகிப் போகும் இருதயத்தை என்னை விட்டு அகற்றி, உம்முடைய வழிகளிலே நடக்கும் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 2:4-10