புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2021)

ஜீவ யாத்திரை முடிவும்வரை..

சங்கீதம் 48:14

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களி லும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.


ஆண்டவராகிய இயேசு, பரலோகத்திற்கு எழுந்தருள முன்பாக, தம் முடைய சீஷனாகிய சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமா ரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பா யிருக்கிறாயா என்றார். ஒரு முறையல்ல மூன்று தடவைகள் சீமோன் பேதுருவினிடத்திலே கேட்டார். மேலும், நீ இளவயதுள்ளவனாயிருந்த போது உன்னை நீயே அரைகட்டிக் கொண்டு, உனக்கு இஷ;டமான இட ங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கை களை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ;டமி ல்லாத இடத்துக்கு உன்னைக் கொண் டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகி றேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகி மைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக அவனைக் குறி த்த அழைப்பின் மேன்மையை அறிந்து இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். ஒருவேளை நாம் ஊழியர்களாகவோ, விசுவாசிகளாகவோ இரு க்கலாம். ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம் நாமெல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கின்றோம் (கலா த்தியர் 3:28). நித்திய ஜீவனுக்கென்று ஒரே அழைப்பை பெற்றிருக் கின்றோம்;. இந்த பூவுலகத்திலே வாழும் நாட்களிலே எங்களுக்கு கொடு க்கப்பட்ட பொறுப்புகள் வௌ;வேறாக இருக்கலாம். ஒருவேளை ஊழி யத்திலும், உதவி ஊழியத்திலும், நமக்கு கொடுக்கப்பட்ட மற்றய பொறு ப்புகளிலிருந்து நாம் ஒய்வுபெற வேண்டிய நாட்கள் வரலாம் ஆனால் நம் சுவாசம் நம்மில் இருக்கும்வரை, நாம் ஒவ்வொருவரும் கர்த்தரு டைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களாயிருக்கின்றோம் என்பதை மறந்து விடக்கூடாது. சீமோன் பேதுரு தன் மரணபரியந்தமும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படிக்கு அழைக்கப்பட்டது போல, நாமும் நம்முடைய வாழ்க்கை முடியும் வரைக்கும், நாம் செய்யும் செயல்கள் வழியாக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய நாமமானது மகிமை படுத்தப்பட வேண்டும். இந்த ஜீவ யாத்திரையின் பதையில் ஜீவனுள்ள நாட்களெல்லாம் நம்மோடு இருக்கின்ற தேவ ஆவியான வர்தாமே மரணபரியந்தம் நம்மை சகல சத்தியத்திலும் வழிநடத்தி, நாம் தேவனுடைய நற்சாட்சிகளாக விளங்கும்படிக்கு செய்வராக.

ஜெபம்:

உலகம் முடியும்வரைக்கும் உங்களோடிருப்பேன் என்ற கூறிய தேவனே, என் இறுதி மூச்சுவரைக்கும் நான் உமமுக்கு பிரியமுள்ள பிள்ளையாக வாழ என் முதிர்வயதிலும் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 46:4