புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 30, 2021)

ஒருவரையொருவர் தேற்றுங்கள்

1 தெச 4:18

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.


நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவி டப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. இந்த உலகத்திலிருப்பவனைவிட நம்மோடு இருக்கின்ற கர்த்தர் பெரியவர். பரலோக யாத்திரிகளாக இந்த உலகத்தை கடந்து கொண்டிருக்கும் நம்மை, நிச்சயமாக தம்மிடம் சேர்த்துக் கொள்வார். கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் நம்; யாவ ரையும் இயேசுவைக் கொண்டு எழுப்பி, தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று நாம் அறிந்திருக்கின்றோம். அந்த நாளை எதிர்நோக்கி வாழ்ந்த பரிசுத்தவான்கள் தாமே உயிர்தெழும் நம்பிக்கையோடே இளைபாறுதலிலே பிரவேசித்திருக்கி ன்றார்கள். இப்போது உயிரோடிருக்கும் நாமும் அந்ந நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றோம். ஒரு வேளை கர்த்தர் வர தாமதமா னால், நாமும் முன்னோடிகளாகிய பரிசுத்தவான்களைப் போல இளைப்பாறுதலிலே பிரவேசிப்போம். கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோ டிருப்பவர்கள், கர்த்தருக்குள் நித்திரையடைந்து இளைப்பாறுகின்றவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆர வாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத் தோடும், தேவ எக்காளத் தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக் குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடி ருப்பவர்கள் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள்மேல், அவர் களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்பார்கள். ஆகையால், இந்த வார் த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். நடக்க விருக்கும் இந்த காரியங்களை அறிந்த நாம் சோர்ந்துபோகிற தில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷ னானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிற வைகளை யல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத் தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிற வைகள் அநித்தியமானவைகள், காணப்படாத வைகளோ நித்தியமான வைகள். எனவே இளைத்துப் போய்விடாமல், உற்சாகத் தோடு முன் செல்லுங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர்.

ஜெபம்:

நித்திய வாழ்வை தருவேன் என்ற தேவனே, இந்த உலகத்திலே நாங்கள் எதிர்நோக்கும் உபத்திரவங்களினால் சோர்ந்து போகாமல், முன் னேறிச் செல்லும்படிக்கு எங்களை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-3