புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 29, 2021)

நேசிக்கின்ற பிதா

எபிரெயர் 12:7

தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?


பிள்ளைகள் விரும்பி கேட்பதற்கு மேலாகவே அவர்களுக்கு கொடுக் கின்றோம். அவர்களுடைய வைபவங்கள் யாவற்றையும் பெரும் கொண் டாட்டமாக பல்லாரயிரக்கண்ணாக பணத்தை செலவழித்து செய்கின் றோம். அவர்கள் கேட்பது எதையுமே அவர்களுக்கு நாம் தடை செய்வ தில்லை. ஏனெனில் நாம் நம் பிள்ளைகயை அன்பு செய்து வருகின்றோம் என்று ஒரு பெற்றோர் கூறிக் கொண்டார்கள். பிள்ளைகளுக்கு மிகை யாக கொடுப்பதும், அவர்கள் விரும்பி யதை செய்வதும், ஊர் உலகம் அறிய வைபவங்களை கொண்டாதுவதும் உண் மையான அன்பின் வரைவிலக்கணம் அல்ல. நமக்கொரு பரம பிதா இருக்கின்றார். அவர் நம்மை தந்தையைப் போல தோளிலே சுமக்கின்றவர். தாய் மறந்தாலும் நம்மை மறந்து போகாதவர். அவர் நன்மையான ஈவுகளையே பரலோகத்தலிருந்து நம க்கு கொடுக்கின்றவராக இருக்கின்றார். அவர் நம்மை உண்மையாக நேசி ப்பதால், தம்முடைய வார்த்தைகள் வழியாக, நாம் தேறினவனர்களா கவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதி யுள்ளவர்களாகவும் வளரு ம்படிக்கும், நமக்கு உபதேசித்து, கடிந்து கொண்டு, சீர்திருத்தி, தேவ நீதியை நம்முடைய வாழ்வில் நடப்பிப்ப தற்கு கற்றுக் கொடுக்கின்றார். சில வேளைகளிலே, நாம் நன்மை என்று நினைக்கும் காரியங்களாவன பின்னர், பெரிதான தீமை உள்ளதாக மாறிவிடுகின்றது. அதை அறிந்த பரம தந்தை, நாம் நித்திய ஜீவனை இழந்து போகாதபடிக்கு அதை நம்மைவிட்டு அகற்றி விடுகின்றார். எனவே, இந்த உலகிலே நல்ல பெற்றோராக நாம் இருக்க விரும்பினால், எங்கள் பிள்ளைகள் பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை தங்களுடைய வாழ்க்கையிலே நிறை வேற்றுவதற்கு கற்றுக் கொடுத்து, அவற்றை நிறைவேற்ற இடங் கொடு க்க வேண்டும். பிள்ளைகள் கேட்கும் காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஆம் என்ற பதிலை கொடுக்க முடியாது. அன்றியும்: என் மகனே, கர்த்த ருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்து கொள் ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகி றாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். நம்முடைய பரம பிதா தம்முடைய பரிசுத் தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோ ஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். தமது விருப்பம் போல நம்மை நடத்தி, முடிவிலே மகிமையிலே நம்மை சேர்த்துக் கொள்வார்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக பிதாவே, நீர் என் இருதயத்தின் நினைவுகளையும், காலங்களையும் அறிந்தவர். உம்முடைய சித்தம் என் வாழ்வில் நிறைவேறும்படிக்கு, என்னை நீர் சீர்திருத்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24