தியானம் (புரட்டாசி 27, 2021)
அளக்கப்படும் அளவு
மாற்கு 4:24
எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்;
ஒரு வயதானவர், கிழமைதோறும் தன் பேரப்பிள்ளைகளை சந்திக்கும் போது, அவர்களுக்கு பல கதைகளைக் கூறி, அவர்களோடு சேர்ந்து விளையாடி வருவார். அந்த வேளைகளிலே, தன் பேரப்பிள்ளைகளின் மனதிலே, நல்ல வித்துக்களை அவ்வப்போது போட்டுக் கொள்வார். ஒரு நாள், அவர் தன் பேரப்பிள்ளைகளை நோக்கி: எல்லாவற்றையும் தங்களுக்கென்று சேர்த்து வைக்கி ன்றவர்களின் ஆசை சேர்த்து வைக் கும் பொருட்களிலே இருக்கும். நீங் களோ அப்படியிருக்காமல், உங்களி டம் உள்ளதை ஏழை எளியவர்களு டன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பேரப்பிள்ளைக ளில் மூத்தவன்: தாத்தா, அப்படியானால் எவ்வளவு பொருட்களை நாம் எங்களுக்கென்று சேர்த்து வைக்க வேண்டும்? எவ்வளவு பொருட்களை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு பாட்டனார் மறுமொழியாக: ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடு க்கிறான்; என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது எனவே நீ கர்த்தருக்கு எவ்வளவு பொருட்களை கொடுக்க விரும்புகின்றாயோ அவ்வளவு பொருட்களை கொடு என்று கூறினார். பிரியமானவர்களே, நாம் எவ்வ ளவு பொருட்களை நாளைக்காக சேர்த்து வைக்க வேண்டும்? எவ்வளவு பொருட்களை வறியவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்? என்பதைக் குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்து தங்கள் தீர்மானங்களை தங்கள் இருதயத்தில் எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஏதோ காரணத்தி னாலே, நீங்கள் வறுமைக் கோட்டிற்குள் வாழ்கின்றீர்கள். நாளாந்த உணவை பிள்ளைகளுக்கு கொடுப்பது பெரிய போராட்டமாக இருக்கி ன்றது. வீட்டிலே இருக்கும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கூட உடுத்துவதற்கு தகுந்த ஆடைகள் இல்லை. பாடசாலைக்குச் செல் வதற்கு வசதிகள் ஏதுவும் இல்லை. மழைகாலம் சமீபமாகின்றது ஆனால் தங்குவதற்கு ஏற்ற உறைவிடம் இல்லை. உங்கள் நிலைமை இப்படி யாக இருந்தால், மற்றவர்கள் எவ்வளவாக உங்களுக்கு உதவ வேண் டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்? நீங்கள் இந்த பூமியிலே இல்லாத நாட்களிலே, உங்களுடைய பிள்ளை பட்டினியாய் இருந்தால், எவ்வளவு நாட்கள் மற்றவர்கள் உங்கள் பிள்ளையை கவனிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்? பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீஙகள் விரும்புகின்றீர்களோ, அதன்படி நீங்கள் அவர்களுக்கு இப் போது செய்யுங்கள்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, இந்த உலகிலே பல உபத்திரவங்கள் மத்தியிலே வாழும் வறியவர்களுக்கு நான் மனப்பூர்வமாக உதவி செய்யும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:12