புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2021)

எதினால் ஜெயிக்கப்பட்டிருக்கின்றீர்கள்?

2 பேதுரு 2:19

எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.


ஒரு சிறு குழந்தையானது தனக்கு பிடித்த விளையாட்டுப் பொருளை, தன்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதற்கு இடங்கொடுக்காது. அந்த விளையாட்டுப் பொருளின் ஆசை அந்தக் குழந்தையின் மனதை பற்றியிருப்பதால், அதன் அண்ணாமரோ, அக்காமாரோ அல்லது தாய் தந்தையரோ, அப்பொருளை தொட்டுக் கொள்வதற்குக்கூட விடாது. அது குழந்தைத்தனம், அல்லது குழ ந்தை அறியாமையினாலே அப்படிச் செய்கின்றது என்று சொல்லிக் கொள் வார்கள். இவ்வண்ணமாவே ஒவ் வொரு பருவத்திலுள்ளவர்களுக்கும் சில காரியங்களைக் குறித்த ஆசை மனதைப் பற்றிக்கொண்டிருக்கும். சிறு பையனுக்கு மாபில் (Marble) பைத்தி யம். அதாவது, தனக்கு மிட்டாய் வாங்கி சாப்பிடும்படி பெற்றோர் கொடுக்கும் பணத்திற்கு மிட்டாய் வாங் காமல், விதவிதமான மாபிலை வாங்கிச் சேர்த்துக் கொள்வான். இப் படியாக வளர்ந்து வரும்போது தொழிநுட்பச் சாதனங்கள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றை வாங்கிக் கொள்வதிலும் அவைகளை பெருக்கு வதிலும் இருக்கும் ஆசை மனதைப் பற்றிக் கொள்கின்றது. குழந்தைப் பருவமும், சிறிய பிள்ளைகளாக இருக்கும் பருவமும் அறியாமையின் காலமாக கருதப்பட்டால், எந்தப் பருவத்தில் இப்படிப்பட்ட ஆசைகள் பொருளாசையாக மாறுகின்றது? அப்படி மாறுவதற்குரிய அறிகுறிகள் என்ன? நிச்சயமாக இந்தக் கேள்விகளை ஒவ்வொருவரும் தங்களிடத் திலே கேட்டு, தங்கள் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்வது மிகவும் நல்லது. சிறு குழந்தையின் உள்ளத்திலே தன்னை சூழவுள்ள தனக்கு அன்பானவர்களைவிட தன்னுடைய விளையாட்டுப் பொருளே அருமையானது என்று எண்ணிக் கொள்கின்றது. அதுபோலவே, வயதி ற்கு வந்தவர்களும் எதின் மேலே ஆசை வைத்திருக்கின்றாரகளோ அவை களை தங்கள் இருதயத்திற்கு அருமையானவைகளாக்கிக் கொள்கின்ற hர்கள். உயிரற்றதும், அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கின்றது மான இவ்வுலக பொருட்களை, நித்திய ஜீவனை பெறக்கூடிய மனித ர்களுக்கு மேலாக உயர்த்துகின்றவன், குழந்தைத்தனமுடையவனாய் அறியாமையிலே வாழ்கின்றான். எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக் கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. பிரியமானவர் களே, நித்திய ஜீவனுக்கென்று அழைப்பைப் பெற்ற நாம் ஒவ்வொ ருவரும், நம்மை நாம் நிதானித்து அறிய வேண்டும்.

ஜெபம்:

மேலானவைகளை தேடும்படி அழைத்த தேவனே, என் ஆசை உம்மைப் பற்றியிருக்கவும், இயேசுவைப்போல இந்த உலகத்தை நான் ஜெயங் கொள்ளவும் எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:22