தியானம் (புரட்டாசி 25, 2021)
உதவி செய்யும் தேவன்
2 நாளாகமம் 14:11
கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்;
'பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது கர்த்தருக்கு லேசான காரியம்;' என்ற வார்த்தை உண்மையுள்ளது. அப் படியானால், ஏன் இந்த வார்த்தையானது, வேதத்திலே காணும் சில பாத்திரங்களின் பலவீன நேரத்திலே அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கவில்லை? கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவ ர்களண்டைக்கும் அவர்கள் உங்கள ண்டைக்கும் பிரவேசிக்கலாகாது. அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங் கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் சாலோமோன் ராஜா தேவ னுடைய கட்டளையை மீறி நடந்த தால் பாவம் செய்தான். அது அவன் மிகவும் பெலனுமான இருந்த கால த்திலே அவனுக்கு இருந்தாலும் பெலவீனம். ஆனாலும் அவன் மனந் திரும்ப மனதில்லாமல், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல் லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனிய ரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான். அவர்களோடு ஐக்கியமாயிருந்தான். தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து மனந்திரும்பவில்லை. காலங்கள் கடந்து வயது சென்று, உடற்பெலவீனம் அடைந்த நாட்களிலே, அவனுடைய மனை விகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப் பண்ணினார்கள்;. தேவனுடைய கிருபை அவனுக்கு இருந்த போதும், தேவனுடைய சத்தத்தை கேட்டவுடனே தன் தந்தையாகிய தாவீது ராஜா வைப் போல பாவத்தைவிட்டு மனந்திரும்பி தன்னை தேவனிடம் ஒப்பு க்கொடுக்கும் சுபாவம் அவனுக்கு இருக்கவில்லை. அதனால், தேவ னாகிய கர்த்தர் அவனோடு பேசுவதை நிறுத்திவிட்டார். பிரியமானவ ர்களே, தேவ கிருபை என்றுமுள்ளது என்பது உண்மை. ஆனால், ஒரு வன் தேவனுடைய கட்டளையை மீறி நடக்கும்படி தன்னை பழக்கிக் கொள்ளும்போது, அவன் தேவ கிருபையை தகாதவிதமாக பயன்படு த்துவதால், பாதகமான பின்விளைவுகளை தன் வாழ்க்கையிலே உண்டு பண்ணிவிடுகின்றான். விழுந்திருப்பவனை தூக்கி விடுவது தேவனுக்கு லேசான காரியம் அவர் உதவி செய்வதற்கு ஆயத்தமுள்ளவராகவே இருக்கின்றார். ஆனால் விழுந்திருப்பவர்கள் அந்த உதவியை பெற்றுக் கொள்ளுவதற்கு ஆயத்தமில்லை. தேவனுடைய கிருபை வரத்தை ஒருவன் தன் வாழ்விலே நன்மைகேதுவாக பயன்படுத்தும் போது, பரிசுத்தமாகுதல் அவனுக்கு கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ஜெபம்:
வருங்காலங்களைய அறிந்த தேவனே, நீர் எனக்குத் தரும் ஆசீர்வாதங்களை, உம்முடைய கட்டளைகளின்படி உம் திருச்சித்தத்தை நிறைவேற்ற பயன்படுத்தும்படிக்கு, என்னை வழிநடத்தியருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 34:9