புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2021)

வார்த்தையைக் காத்துக் கொள்ளுங்கள்

லூக்கா 11:28

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத் துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.


சமஸ்த இஸ்ரவேலையும் அரசாண்ட தாவீதின் குமாரானாகிய சாலொ மோனுக்கு, தேவன்தாமே மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். தேவனாகிய கர்த்தர் சாலொமோனை நோக்கி: ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உன க்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமை யையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவ னுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. ஆனாலும் இப்படிப்பட்ட ஞான மும், மனோவிருத்தியுமுள்ள சாலொமோன், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தான். அந்நிய தேவர்களுக்கு தூபம் காட்டினான். அந்த வேளையிலே கிருபையுள்ள தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டார். அவனோ, வல்லமையுள்ள தேவனுடைய கிரு பையினை விடுத்து, அவன் ஆளுகையின் நாட்களிலே சமாதானத்தை உண்டாக்கிய கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்த எல்லாவற்றையும் கைக்கொள்ளாமற்போனான். அவன் தன் தகப்பனைப் போல தன்னை தேவ சமுகத்திலே தாழ்த்தி கிருபையின் நாட்களை நன்மையாக பயன்படுத்தாததால் கர்த்தர் அவன்மேல் கோப மானார். அதன்பின் கர்த்தர் அவனோடு பேசவில்லை. பிரியமானவர் களே, உங்களை பாவம் செய்யத் தூண்டும் பிசாசானவனின் சத்தத் திற்கு செவி கொடுப்பீர்களானால், அவன் உங்களை கொல்லவும் அழி க்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்பதை திட்டமாக அறிந்து கொள்ளுங்கள். முதலாவதாக, அவன் பொய்க்கு பிதாவாக இருப்ப தால், உங்களை வஞ்சித்து, நீங்கள் தேவனின் கட்டளையை மீறுவது உங்களுக்கு நன்மையானது என்று கூறுவான். பின்னர் காலம் கடந்து செல்லும் போது, அதன் பாதகமான பின்விளைவுகளை நீங்கள் கண்டு கொள்வீர்கள். தேவ கிருபை என்றமுள்ளது. அதனால் நாம் பாவம் செய்யும் போது தம்முடைய எச்சரிப்பின் சத்தத்தை அனுப்புகின்றார். மனந்திரும்பும்படி நாட்களைக் கொடுக்கின்றார். தப்பித்துக் கொள்ளும் போக்கையும் நமக்கு உண்டு பண்ணுகின்றார்.

ஜெபம்:

நன்மையால் என் வாயை திருப்தியாக்கும் தேவனே, நீர் கொடுத்திருக்கும் கிருபையின் நாட்களில் நீர் எனக்கு கற்பித்தபடி நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்க என்னை உணர்வுள்ளவனா (ளா)க்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 10:13