புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 23, 2021)

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

யாக்கோபு 4:7

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.


ஒரு அனுபவமிக்க ஊழியர், குற்றமொன்றிலே அகப்படிருக்கும் இளம் ஊழியரொருவரை சந்தித்துப் பேசி, அவரை நல்வழிப்படுத்தும்படிக்கு சென்றிருந்தார். குற்றத்தில் அகப்பட்டிருக்கும் அந்த இளம் ஊழியருக்கு தேவ வார்த்தைகளை எடுத்துக் கூறி, குறித்த சூழ்நிலையிலே செய்ய வேண்டிய காரியங்களை எடுத்துரைத்தார். அவர் கூறிய ஆலோசனைக ளைக்; கேட்பதற்கு, இளம் ஊழியருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. அந்த இளம் ஊழியர்; அனுபவமிக்க ஊழியரை நோக்கி: பல ஆண்டுகளு க்கு முன்னர் நீங்கள் செய்த குறித்த குற்றத்தைவிட, நான் செய்திருப்பது பரவாயில்லை என்று கூறி தனக்கு ஆலோசனை கூறும் மூத்த ஊழியரு க்கு எதிர்த்து நின்றார். பல ஆண்டுக ளுக்கு முன், அந்த அனுபமிக்க மூத்த ஊழியர் தவறியது உண்மை. ஆனால், அந்த நாட்களிலே, தேவனாகிய கர்த்தரின் ஆலோசனையை அவர் ஏற்றுக் கொண்டதால், கர்த்தர் அவரை சகல இடுக்கண்களிலுமிருந்து விடுவித்து மறுபடியும்; ஊன்றக் கட்டினார். அவருடைய பாவங்களை தேவன் தன்னுடைய கணக்கிலிரு ந்து அகற்றி, கழுவி சுத்திகரித்துவிட்டார். தேவனுடைய பார்வையிலே அது முடிந்த கதை. பரிசுத்த வேதாகமத்திலே, தேவனாகிய கர்த்தர் தம் முடைய தூதர்கள் வழியாக தம்முடையவர்களுக்கு செய்தியை அனு ப்பிய போது, பயபத்தியுள்ளவர்கள், பயத்தோடும் நடுக்கத்தோடும், தேவ னுடைய தூதனை ஏற்றக் கொண்டார்கள். அதனால் அவர்கள் தேவ னுக்கு கீழ்ப்படிந்தார்கள். பிசாசானவனுக்கும் அவன் பாவம் செய்யும்படி அனுப்பும் அவனுடையவர்களுக்கும் எதிர்த்து நின்றார்கள். ஆனால் இன்று, தேவனுடைய பிள்ளைகளோ, தேவனுடைய தூதை கொண்டு வரும் தேவனுடைய தாசர்களுக்கு எதிர்த்து நிற்பதால், தேவனுக்கு எதிர்த்து நின்கின்றார்கள். தங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றும்படி பிசாசானவன் அனுப்பும் தூதுகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு சமரசமாகின்றார்கள். பிரியமானவர்களே, தேவன் உங்களை நேசிப்ப தால், நம்முடைய பெலவீன நேரங்களிலே தம்முடைய கிருபையை அளிக்கின்றார். அவர் பெலவீனத்தை மேற்கொள்ளும் வழியை போதிக் கும்படி தம்முடைய வார்த்தையை தம்முடைய தாசர்கள் வழியாக உங் களுக்கு அறிவிக்கின்றார். அந்தக் கிருபையை நீங்கள் வீணடிக்காத படிக்கு தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்;. அப்பொழுது பெருமைக் காரனாகிய பிசாசானவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.

ஜெபம்:

நான் நிர்மூலமாகதபடிக்கு என்னைக் காக்கும் தேவனே, நீர் உம்முடைய வார்த்தையை எனக்கு அனுப்பும் போது, பயபக்தியோடு அதை ஏற்றுக் கொண்டு மனந்திரும்பும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 25:4