புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2021)

பெலவீன நேரத்திலே பெலன்

2 கொரிந்தியர் 12:9

என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.


கர்த்தருடைய ஊழியயத்தின் நிமித்தமாக மோட்டார் வண்டியியொன்றிலே சென்று கொண்டிருந்த ஊழியரொருவர், எதிர்பாராத விபத்தொன்றில் அகப்பட்டதால், அவருடைய இரண்டு கால்களும் செயலிழந்து போனது. அதினிமித்தம் அவர் வேதனையோடு இருந்த வேளையிலே, 'உன் பெலவீனத்தில் என் கிருபை உனக்குப் போதும்' என்ற வசனத்தை தேவ ஆவியானவர் அவருக்கு நினைப்பூட்டி அவரை திடப்படுத்தினார். அவர் தொட ர்ந்து கர்த்தருடைய ஊழியத்தை செய்தார். என் பெலவீன நேரம் உம் கிருபை எனக்குப் போதும் என்ற வார்த் தையானது தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே அதிகமாக பேசப்ப டும் வார்த்தைகளிலொன்றாக இருக்கி ன்றது. மேலே கூறப்பட்ட சம்பவத்திலு ள்ள ஊழியருக்கு கர்த்தர் பெலனாக வந்தார். ஏன்? அவருடைய பெலவீனமான நேரத்திலும் அவர் தேவ நீதியை நிறைவேற்றும்படிக்கு தேவனுடைய கிருபை அவருக்கு வெளிப்பட்டது. ஒரு சமயம், விபச்சார த்திலே கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபா ரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்திலே கொண்டுவந்தார்கள். யூதரு டைய நியாயப்பிரமாணத்தின்படி அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். ஆனாலும், அந்த வேளையிலே தேவ கிருபை அவளுக்கு வெளிப்பட்டது. ஏன்? அவள் தான் பெலவீனமுள்ளவள் என்று கூறி அந்த பாவத்திலே நிலைநிற்பதற்காகவா? இல்லை, நிர்மூலமாகாத படிக்கு பாவத்திலிருந்து விடுதலையடையும்படிக்கே தேவ கிருபையா னது அவள் வாழ்வில் வெளிப்பட்டது. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் தம்மு டைய கிருபையை மனிதர்கள்மேல் பொழிகின்றார். அவர் நீடிய பொறு மையுள்ளவராக இருக்கின்றார். ஏன்? அவர்கள் வேண்டிய மட்டும் பாவம் செய்வதற்காகவா? நான் பெலவீனமுள்ளவன் என்று சுய அனுதாபத்தை மையமாக வைத்து, பாவத்தில் தரித்திருப்பதற்காக அல்ல. தேவனு டைய வார்த்தையை கேட்கும் போது இனிப் பாவம் செய்யாமல் வாழ் வதற்கே தேவகிருபையானது நமக்கு கொடுக்கப்படுகின்றது. ஆத லால் கிருபை பெருகும் என்று பாவத்திலே நிலைநிற்காமல், நீங்கள் பாவம் செய்கின்றீர்கள் என்று சுட்டிக் காட்டப்படும் வேளையிலே உடனடியாக அதிலிருந்து வெளியேறுங்கள். உங்கள் பெலவீனத்தை மேற் கொள்ள தேவன் தரும் கிருபை போதுமானதிலும் மிகவும் அதிகமானதாயிருக்கி ன்றது.

ஜெபம்:

பெலவீன நேரத்திலே கிருபை தரும் தேவனே, உம்முடைய கிருபையினால் நான் பெலவீனத்தை மேற்கொள்ளவும், உம்முடைய நீதியை நிறைவேற்றவும் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 28:7