புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2021)

கற்பனைகள் பாரமானவைகளுமல்ல

1 யோவான் 5:3

அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.


ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களு க்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர் த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புற ப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்க மாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ் தியை அழித்துப்போட்டான். அந்த இளையவன் மூத்தவனைப் போல பல ஆண்டுகளாக தந்தையோடு வாழ்ந்தவன். தந்தை வீட்டிலே இவனு க்கு பங்கு உண்டு. வீட்டிலே அவனுக்கு குமாரனுடைய உரிமைகளும் சலுகைகளும் இருந்தது. அங்கே இவனுடைய விவகாரங்களை கவனி ப்பதற்கு ஊழியர்கள் இருந்தார்கள். ஒருக்காலும் தந்தையின் கட்ட ளையை மீறி நடக்காத மூத்த சகோதரன் இவனக்கு இருந்தான். ஆனால் இளையவன், தன் தந்தையின் கட்டளையை மீறும்படிக்கு துணிகரம் கொண்டான். அதனால், இவன் தன் வாழ்வை தன் விருப்பப்படி வாழும் சுதந்திரம் வேண்டும் என்று தன் இருதயத்திலே நிச்சியியத்துக் கொண் டதால், தந்தையின் வீட்டிலிருந்து தனக்கு சேரவேண்டிய பங்கை பிரித் தெடுத்துக் கொண்டான். தன் தந்தையிடமும், சகோதரனிடமும், தந்தை யின் ஊழியர்களிடமும் இருந்த தன்னை தூரப்படுத்திக் கொள்ளும்படி, தூர தேசத்திற்குச் சென்றுவிட்டான். அவன் சென்ற தேசத்திலே, அவனு க்கு சுதந்திரம் இருந்தது. அவனுக்கு கட்டளை போடுவதற்கு யாரும் அங்கே இல்லை. கையிலே பணம் உண்டு. எனவே, அவன் சுதந்திரம் என்று எதை நினைத்தானோ, அதை தன் வாழ்வில் நடப்பித்தான். துன்மா ர்க்கமாய் வாழ்வதே அவன் வாழ்வில் அவன் விரும்பிய மிகப்பெரிய சுதந்திரம். அவன் உல்லாசமாய் வாழ்ந்து,ஸ்திரிகளிடத்திலே தான் தந் தையிடமிருந்து பெற்றுக் கொண்ட பங்கை அழித்துப் போட்டான். வாழ் வில் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும்படி சென்ற அவன் துன்மார்க்கம் என்னும் அடிமைத்தனத்திற்குள் சிக்கிக் கொண்டான். உல்லாசமான வாழ் வைத் நாடிச் சென்ற இளையவன், தன் வாழ்வின் சமாதானத்தை இழ ந்து போனான். பிரியமானவர்களே , மனந்திரும்பும் பாவிகளை தேவன் அரவணைத்து சேர்த்துக் கொள்வார். நாம் தேவனை விட்டு பின்மாற்; ற்றமாய் போவதற்கு அவருடைய கட்டளைகள் பாரமானவைகள் அல் லவே. அவைகள் நம்முடைய வாழ்வில் சமாதானத்தையும், கர்த்தரு டைய பாதுகாப்பையும் தருகின்றது. முடிவிலே நம்மை கர்த்தருடைய சுதந்திரத்திலே சேரும்படிக்கு நம்மை வழிநடத்துகின்றது.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, இந்த உலகம் தரும் சுதந்திரத்தின் முடிவிலே அழிவு இருக்கின்றது என்பதை கண்டு கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து என்னை வழிடநத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:4