புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2021)

கீழ்ப்படிவோடு கற்றுக்கொள்ளுங்கள்

1 பேதுரு 5:5

நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்;


போதகரே, நான் பிறப்பதற்கு முன்பாகவே ஆண்டவர் இயேசுவை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். என்னிடம் பெலவீனங்கள் உண்டு. உங்கள் வாழ்விலுள்ள முதிர்ச்சியை என்னிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது என்று ஒரு இளைஞன் தன் போதகரிடம் கூறினான். அதற்கு அந்தப் போதகர்: மகனே, நீ கூறியது நூற்றுக் நூறு வீதம் உண்மை. நான் என் வாலிப நாட்களை கடந்து, பல அனுபவங்களுக்கூடாக வந்திருக்கின் றேன். நான் என் வாழ்க்கையில் எடு த்த தீர்மானங்கள் யாவும் சரியான வைகள் அல்ல. நான் என் சொந்த புத்தியில் சார்ந்து எடுத்த தீர்மானங் களால் பல நோவுகள் ஏற்பட்டிருந் தது. அவைகளின் சத்தம் இன்னும் எதிரொலிக்கின்றது. நீயோ, உன் வாழ்க்கையில் எடுக்க வேண்டிய முக் கியமான தீர்மானங்கள் வெகு சீக்கிரத்தில் வருகின்றது. அதே வேளை யிலே, நீ விட்ட தவறுகளும் பாரதூரமானவைகளும் அல்லவே. 'என் னிடம் பெலவீனங்கள் உண்டு. உங்கள் வாழ்விலுள்ள முதிர்ச்சியை என் னிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது' என்று நீ உன் நிலையை நியாய ப்படுத்திக் கூறுகின்றாய் ஆனால் உன்னிலும் முதிர்ச்சியடைந்தவர்கள் உனக்கு அறிவுரை கூறும்போது, நீ அவர்களின் சொல்லைக் கேளாமல், உன் வாழ்க்கையை வெற்றியோடு ஓடி முடித்தவன் போல அவர்க ளுக்கு போதிக்கின்றாய்; நீ கூறுவதும் செய்வதும் ஒன்றோடொன்று முரணாக இருக்கின்றதே என்று அவனுக்கு அவர் பதிலளித்தார். பிரி யமானவர்களே, இன்றைய நாட்களிலே அநேகர் அந்த வாலிபனைப் போல தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தும்படி தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றார்கள் ஆனால் அந்த குற்றங்களிலிருந்து விடுதலையடை வதைப் பற்றி போதிக்கும் ஊழியர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார்கள் அல்லது இது என் தனிப்பட்ட வாழ்வு அதற்குள் நீங்கள் வராதிருங்கள் என்று தங்களைச் சுற்றி தாங்ளே ஒரு அக்கிரமத்தின் மதிலை கட்டி யெழுப்புகின்றார்கள். இவர்கள் கர்த்தருடைய வேதத்தையும் அவர் நிய மித்த ஒழுங்குகளையும் அசட்டை செய்வதால், இவர்களுடைய ஜெபம் கேட்கப்படாதபடிக்கு இவர்கள் தங்களைச் சுற்றி கட்டிய மதிலே இவர்க ளுக்கு தடையாக இருக்கின்றது. பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதி ர்த்து நிற்கின்றார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கின்றார். எனவே கர்த்தருடைய வார்த்தைக்கும் அவர் நியமித்த ஒழுங்குகளுக் கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நீங்கள் கண் காணாத தேவனுக்கு கீழ்ப்படிவீர்கள்.

ஜெபம்:

என் வாழ்வின் நிலையை அறிந்த தேவனே, நான் நாளுக்கு நாள் தேவ சாயலிலே வளரும்படிக்கு, உம்முடைய திருவசனத்தை போதிக்கின்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு கீழ்படியும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:12