புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 18, 2021)

சுதந்திரமும் பாதுகாப்பும்

நீதிமொழிகள் 19:16

கட்டளையைக் காத்துக் கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்;


ஒரு ஐசுவரியவானின் மகனானவனிற்கு அநேக நண்பர்கள் இருந் தார்கள். அவனுடைய பெற்றோர் அவனை நோக்கி: உன்னுடைய நண்ப ர்கள் யார் என்பதைக் குறித்து நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண் டுமென்று பல முறை அறிவுரை கூறியிருந்தார்;. அவன் தன் தகப்பனை நோக்கி: நான் இப்போது சிறு பிள்ளையல்ல. என்னுடைய நண்பர்க ளைத் தெரிந்து கொள்வதற்கு கூட எனக்கு சுதந்திரம் இல்லையா என்று கோபித்து கொண்டான். தன்னு டைய பிறந்த தினமன்று அவன் தன் நண்பர்கள் யாவருக்கும் பெரிய விருந்தை ஏற்படுத்தினான். சில மணி த்தியாலங்களின் பின்னர், அநேக பொலிஸ் வாகனங்கள் அந்த மாளி கையைச் சுற்றி வளைத்து, தேடுதல் நடத்தினார்கள். அந்த விருந்திலே சட்டவிரோதமான காரியங்கள் நடை பெற்றதால். பொலிசார் விசாரணை செய்தார்கள். அவன் நண்பர்கள்: ஐசுவரியவானின் மகனே, அப்படிச் செய்யச் சொன்னான் என்று அவன் மேல் பழியை போட்டுவிட்டார்கள். ஐசுவரியவானின் மகனோடுகூட பொலிசார் பலரை கைது செய்தார்கள். தகப்பனானவர் பொலிஸ் நிலை யத்திற்கு சென்ற போது, மகனானவன்: அப்பா, என்னைக் காப்பாற்று ங்கள். என்னை இப்போதே வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என்றும் தகப்பனானவர் உடனடியாக தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் எதிர் பார்த்திருந்தான். பாருங்கள், இந்த மகனானவனிற்கு, தன் பருவத்திற்கு வந்ததும் தன் இஷ;டப்படி வாழ சுதந்திரம் தேவைப்பட்டது. தனக்கிரு க்கும் சுதந்திரத்தின்படி தன் நண்பர்களை தெரிந்து கொண்டான். ஆனால், தன் தீர்மானங்களினால் ஆபத்து ஏற்பட்ட போது, தன் தகப்பன் தன்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்;த்தான். இன்று, சில தேவ பிள்ளைகளும், இது என்னுடைய வாழ்வு, இது தனிப்பட்ட காரியம் என்று தங்கள் சுதந்திரப்படி வாழும் வழிகளையும், அதற்கு உடன்படும் ஐக்கியங்களையும் தேடுகின்றார்கள். ஆனால் நாட்கள் சென்று, தங்கள் சுதந்திரத்தினாலே பாதகமான பின்விளைவுகளைக் காணும் போது, தேவன் எங்கே? ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றாரே? என்று குரலெழுப்புகின்றார்கள்.; தேவனுடைய பாதுகாப்பு ஒருவனுக்கு தேவை என்றால், அவன் தன் இஷ;டப்படி சுதந்திரமாக தீர்மானங்களை எடுக்காதபடிக்கு, தேவனுடைய கட்டளைகளுக்கு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அப்படி நடக்கின்றவனு டைய சத்தத்தையே தேவன் கேட்பார்.

ஜெபம்:

எத்தீங்கும் அணுகாமல் என் ஆத்துமாவை காக்கும் தேவனே, உம்முடைய கட்டளைகளின் வழியே என்னுடைய பாதுகாப்பு என்பதை நான் உணர்ந்து அந்த வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 50:14-15