புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 17, 2021)

பெருமைக்கு இடங்கொடாதிருங்கள்

எண்ணாகமம் 12:2

கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.


தேவன்தாமே, தம்முடைய ஜனங்களை வழிடத்தும்படி மோசே என்னும் மிகுந்த சாந்த குணமுள்ள மனிதனை தெரிந்து கொண்டார். அவனுக்கு மிரியாம் என்னும் மூத்த சகோதரியும், ஆரோன் என்னும் மூத்த சகோ தரனும் இருந்தார்கள். அவர்களில் ஆரோன் ஆசாரிய ஊழியத்திற்கு என்று பிரித்தெடுக்கப்பட்டான். சகோதரியாகிய மிரியாம் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தாள். இவர்கள் தேவனோடு இடைப்படுகின்றவர்களும், ஜனங்களை தேவனிடம் சேரப்பவர்களு மாக இருந்தார்கள். ஆனால் மோசே யோ இஸ்ரவேல் ஜனங்களுக்கும், இவ ர்களுக்கும் தலைவனாக தேவனாலே அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான். ஒரு சமயம், ஆரோனும், மிரியாமும் 'மோ சேக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ' என்றார்கள். இதனால் கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது. இன்றைய நாட்களிலும், சபைகளிலே வேதத்தை நன்கு அறிந்தவர்களும், தேவனுக்கு பிரியமான துதி ஆராதனை செய்கின்றவர்களும், ஜெபிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் யாவருக்கும் தேவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேய் ப்பன் இருக்கின்றார். சில வேளைகளிலே, பல காரணங்களுக்காக, தேவ ஆலோசனையை மேய்ப்பனிடமோ அல்லது நியமிக்கப்பட்டவர்களிட மோ கேளாமல், தேவன் எங்களோடும் பேசுகின்றவர், நாங்களும் அனு தினமும் ஜெபிக்கின்றோம், எங்களுக்கும் வேதம் தெரியும் என்று ஆலோசனைகளை தள்ளிவிட்டு ஒருசிலர் தங்கள் முடிவுகளை தாங் களே எடுத்துக் கொள்கின்றார்கள். ஒருவன் 'நான் வேதத்தை அறிந்த வன், நான் ஜெபிப்பவன், நான் தேவனோடு பேசுபவன்' என்று தன் னைக் குறித்து தானே மேன்மைபாரட்டும் போதே, அவன் தேவனுடைய வார்த்தைக்கு மேலாக தன்னை உயர்த்துகின்றான் என்பதை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் மோசேயை அழைத்து, நீ எகிப்துக்குப் போ என்று கூறிய போது, அவன் தன்னைத் தாழ்த்தி, தன் இக்கட்டு கால த்திலே தனக்கு வீட்டைத் திறந்த தன் மாமனாரிடத்திற்குச் சென்று உத் தரவு பெற்றுக் கொண்டான். அந்த குணயியல்பு அவனுடைய மனத்தா ழ்மைiயும், கீழ்படிவையும், நன்றியறிதலையும் காண்பிக்கின்றது. பிரி யமானவர்களே, தேவ ஆலோசனைகளை தள்ளிவிடாதிருங்கள். ஒரு வேளை தேவன் உங்களோடு பேசினால், மோசேயைப் போல உங்க ளைத் தாழ்த்துங்கள்.

ஜெபம்:

என் உள்ளத்தின் நினைவுகளை அறிந்த தேவனே, உம்முடைய வழிகளுக்கு எதிராக நான் மனமேட்டிமை கொள்ளாதபடிக்கு, நீர் குறித்த வழியிலே நான் கீழ்ப்படிந்து நடக்க எனக்கு கற்றுத் தருவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எண்; 16:1-50