புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 16, 2021)

உம்முடைய ஆலோசனைகளின் வழிகள்

நீதிமொழிகள் 15:22

ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.


ஒரு மனிதனானவன், வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்கும்படி தன்னிலே தீர் மானம் செய்து கொண்டு, அதற்குரிய ஆயத்தங்கள் யாவையும் செய்து முடித்தான். அவன் வழமையாக செய்வது போல, தனக்கு ஆலோசனை கூறும் தேவ பயமுள்ள தன்னுடைய நல்ல நணபனிடம் எதையும் கூறாமல், வியாபாரம் ஆரம்பிப் தற்குரிய நாளும் நியமிக்கப்பட்டபின்பே அதை தன் நண்பனிடம் அறிவித்தான். ஏனெனில், தன் நண்பன் ஒருவேளை தன் திட்டத்திற்கு எதிராக அறிவுரை கூறிவிடுவான் என்ற பயம் அவ னிடத்தில் இருந்தது. ஆதலால் நான் நினைத் திருக்கும் வியா பாரத்தை ஆரம்பிக்க முடியாது என்று எண்ணியிருந்தான். வியாபாரம் ஆரம்பிக்கபட்டபின்பு, யாவும் நன்றாக இருக்கும் போது, அவனுடைய நண்பன் ஒருநாள் வியாபாரம் ஆரம்பித்தவனை சந்தித்து, நண்பா: நீ மிகவும் இளைப்படைந்து இருப்பதைப் போல ஒரு சொற்பனம் கண்டேன். உன்னுடைய புதிய வியாபாரத்தை குறித்து எச்சரிக்கையாயிரு. உன் ஆரோக்கியத்தையும், உன் குடும்பத்தின் சமாதானத் தையும் இழந்து போய்விடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று கூறி னான். அதைக் கேட்ட அந்த மனிதனானவன் மனதிலே எரிச்சல டைந்தான். பல ஆண்டுகள் கடந்து சென்றபின்பு, அந்த நண்பன் கூறிய பிரகாரமாகவே அவனுக்கு சம்பவித்தது, ஆனால் அவன் முன்னெச்சரித்தபடியினால், பொருள் சேதம் மட்டும் ஏற்பட்டது, அவன் தன் உடல் ஆரோக்கியத்தையும், குடும்ப சமாதானத்தையும் காத்துக் கொண்டான். பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே, இன்று பலர் தங்களது வாழ் வில் முக்கிய தீர்மானங்களை எடுக்க, முன்பு தங்களுக்கு நல்ல ஆலோ சனை கூறிவந்தவர்களை தங்கள் திட்டத்திற்கு புறம்பாக்கி விடுகின் றார்கள். 'நான் அவர்களிடம் கேட்டால் நான் செல்லவிருக்கும் நீண்ட பிரயாணத்தை நான் நினைத்தபடி செய்ய முடியாது' 'அவரிடம் அறிவுரை கேட்டால், இந்த திருமணத்தை செய்து கொள்ள முடியாது' என்று திட்டமிட்டு தங்கள் வாழ்வில் பிழையான தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். இதனால் நீண்ட கால எதிரடையான பின் விளைவு களுடனான தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றார்கள். எனவே வாழ்வில் தீர்மானங்களை எடுக்கு முன்பு, தேவன் கொடுத்திருக்கும் ஆலோச னைகளை தள்ளிப் போடாதிருங்கள்.

ஜெபம்:

நான் உனக்கு போதித்து நீ நடக்கும் பாதையை காட்டுவேன் என்று சொன்ன தேவனே, உம்முடைய போதனைக்கு நீர் நியமித்திருக்கும் ஒழுங்குகளை நான் தள்ளிப்போடதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 10:17