புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2021)

ஆலோசனை கூறுபவர்கள்

நீதிமொழிகள் 11:14

ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.


தேசத்தின் கடைமுனையிலுள்ள, கிராமத்திலே, குடிப்பதற்கு நல்ல தண் ணீர் இல்லாதிருந்தது. அந்த கிராமத்திற்கு, அதன் அருகிலுள்ள ஊரி லிருந்து குடி நீரானது (றுயவநச டீழறளநச) வாகனத்தில் கொண்டு செல்லப் பட்டது. அந்தக் கிராமத்திற்கும், தண்ணீர் விநியோகிக்கும் ஊருக்கும் இடையில் ஒரே ஒரு பாலம் இருந்தது. அந்தக் கிராமத்தை எப்படி யாவது கைப்பற்ற வேண்டும் என்று அதற்கு எதிராக செயற்பட்டு வந்த எதிரிகள் சிலர், அந்தப் பாலத்தை உடைத்துப் போடும்படிக்கு வகை தேடித் திரிந்தார்கள். அதனால், அந்த கிராமத்தின் மூப்பர்களுக்கும், அருகி லுள்ள ஊரின் நகர சபையினருக்கு மிடையிலுள்ள நன்மதிப்பை தந்திர மாக உடைத்துப் போடுவதற்கு, கிரா மத்தின் ஜனங்கள் எதிரிகளின் வஞ்சக மான சூழ்ச்சிக்கு இடங் கொடுத்தார்கள். அதனால், அந்தக் கிராமத்தினர் தங்கள் ஆதரவுகோலை தாங்களே உடைத்துப் போட்டார்கள். பிரியமா னவர்களே, இந்தப் பிரகாரமாகவே, வஞ்சனையானது, சபை ஐக்கியங்க ளுக்குள் உட்பிரவேசிப்பதற்கு சிலர் தந்திரமாக இடங் கொடுக்கின்றா ர்கள். தங்களுக்கு நன்மையென கருதி, ஆதரவாக இருந்து, தேவனு டைய வசனத்தை கலப்பில்லாமல் பேசுகின்ற சகோதரர்களுடனான நல்லுறவுகளை துண்டித்து விடுகின்றார்கள். இவர்கள் எப்போதும் கண் டித்துப் பேசுகின்றவர்கள் என்று தமக்கேயுரித்தான தேவ ஆலோசனை யின் பாலங்களை உடைத்துப் போடுகின்றார்கள். இவ்வண்ணமாகவே, இஸ்ரவேலின் ராஜாக்களில் ஒருவன், யுத்தத்திற்கு போகும் முன்பு, கர் த்தரிடத்தில் விசாரிக்கும் உண்மையான தீர்க்கதரியாகிய மிகாயாவிடம் தேவ வார்த்தையை கேட்க மனதில்லாதிருந்தான். ஏனெனில் மிகாயா, தனக்கு தன்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்க தரிசனஞ்சொல்லுகிறவன் என்று, அவன் உண்மையுள்ள தேவ ஊழி யனை பகைத்து, தான் விரும்பியதைப் பேசும் பொய்யான 400 தீர்க்க தரிகளை பின்பற்றி, யுத்தத்திலே மரித்துப் போனான். பிரியமானவர் களே, உங்களுக்கு தேவ ஆலோசனை கூறுபவர்களின் தொடர்புகளை துண்டித்துப் போடாதிருங்கள். உங்களை நடத்துகிறவர்கள், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்க ளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து அடங்குங்கள்;. அவர்கள் துக்கத்தோடே அப் படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.தேசத்தின் கடைமுனையிலுள்ள, கிராமத்திலே, குடிப்பதற்கு நல்ல தண் ணீர் இல்லாதிருந்தது. அந்த கிராமத்திற்கு, அதன் அருகிலுள்ள ஊரி லிருந்து குடி நீரானது (றுயவநச டீழறளநச) வாகனத்தில் கொண்டு செல்லப் பட்டது. அந்தக் கிராமத்திற்கும், தண்ணீர் விநியோகிக்கும் ஊருக்கும் இடையில் ஒரே ஒரு பாலம் இருந்தது. அந்தக் கிராமத்தை எப்படி யாவது கைப்பற்ற வேண்டும் என்று அதற்கு எதிராக செயற்பட்டு வந்த எதிரிகள் சிலர், அந்தப் பாலத்தை உடைத்துப் போடும்படிக்கு வகை தேடித் திரிந்தார்கள். அதனால், அந்த கிராமத்தின் மூப்பர்களுக்கும், அருகி லுள்ள ஊரின் நகர சபையினருக்கு மிடையிலுள்ள நன்மதிப்பை தந்திர மாக உடைத்துப் போடுவதற்கு, கிரா மத்தின் ஜனங்கள் எதிரிகளின் வஞ்சக மான சூழ்ச்சிக்கு இடங் கொடுத்தார்கள். அதனால், அந்தக் கிராமத்தினர் தங்கள் ஆதரவுகோலை தாங்களே உடைத்துப் போட்டார்கள். பிரியமா னவர்களே, இந்தப் பிரகாரமாகவே, வஞ்சனையானது, சபை ஐக்கியங்க ளுக்குள் உட்பிரவேசிப்பதற்கு சிலர் தந்திரமாக இடங் கொடுக்கின்றா ர்கள். தங்களுக்கு நன்மையென கருதி, ஆதரவாக இருந்து, தேவனு டைய வசனத்தை கலப்பில்லாமல் பேசுகின்ற சகோதரர்களுடனான நல்லுறவுகளை துண்டித்து விடுகின்றார்கள். இவர்கள் எப்போதும் கண் டித்துப் பேசுகின்றவர்கள் என்று தமக்கேயுரித்தான தேவ ஆலோசனை யின் பாலங்களை உடைத்துப் போடுகின்றார்கள். இவ்வண்ணமாகவே, இஸ்ரவேலின் ராஜாக்களில் ஒருவன், யுத்தத்திற்கு போகும் முன்பு, கர் த்தரிடத்தில் விசாரிக்கும் உண்மையான தீர்க்கதரியாகிய மிகாயாவிடம் தேவ வார்த்தையை கேட்க மனதில்லாதிருந்தான். ஏனெனில் மிகாயா, தனக்கு தன்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்க தரிசனஞ்சொல்லுகிறவன் என்று, அவன் உண்மையுள்ள தேவ ஊழி யனை பகைத்து, தான் விரும்பியதைப் பேசும் பொய்யான 400 தீர்க்க தரிகளை பின்பற்றி, யுத்தத்திலே மரித்துப் போனான். பிரியமானவர் களே, உங்களுக்கு தேவ ஆலோசனை கூறுபவர்களின் தொடர்புகளை துண்டித்துப் போடாதிருங்கள். உங்களை நடத்துகிறவர்கள், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்க ளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து அடங்குங்கள்;. அவர்கள் துக்கத்தோடே அப் படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

ஜெபம்:

ஆலோசனை தரும் தேவனே, நீர் என் வாழ்வில் ஈவாக தந்திருக்கும் ஆலோசகர்களின் நல்லுறவுகளை உடைத்துப் போடாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:7