புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2021)

ஏற்றகாலம்வரை பொறுமையாயிருங்கள்

1 பேதுரு 5:6

ஆகையால், ஏற்றகாலத் திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவரு டைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.


ஒரு நாட்டை அரசாண்டு வந்த ராஜாவிற்கு ஒரு குமாரன் இருந்தான். அந்தக் குமாரன் இளவரசனாகவும், ஒருநாள் தன் தந்தைக்கு பின்னர் ராஜாவாகவும் முடி சூடப்படுபவனாகவும் இருந்ததால், அவனுடைய மெய் ப்பாதுகாவலர்கள் கண்ணும் கருத்துமாக அவனைப் பாதுகாத்து வந் தார்கள். அவன் வாலிப பிராயத்தை அடைந்ததும், அனுதினமும் தான் செல்லும் இடமெல்லாம் போர்ச்சேவகர் தன் பின்னே வருவதையும்;, தன்னை சுற்றியிருக்கும் பலத்த பாது காப்பு அரண்களையும், ராஜகுமார னாக இருந்தும் தனக்கு இருக்கும் கட் டுப்பாடுகளையும் குறித்து சலிப்படை ந்து கொண்டான். என் வாழ்வில் என க்கு சுதந்திரம் இல்லை, நான் இப் போது வளர்ந்துவிட்டேன், என்னை நான் பாதுகாத்துக் கொள்வேன் என்று எண்ணி, தன்னை சூழவுள்ள மெய்கா வலர்கள் தன்னை காணாதபடிக்கு மாறு வேடம் பூண்டு, தன் பாதுகாப்பு வலயத்தைவிட்டு சற்று தொலை விலுள்ள ஊரொன்றுக்குள் சென்றுவிட்டான். அந்த நாளை எதிர்பார் த்துக் கொண்டிருந்த எதிராளிகள் அவனை இலகுவாக பிடித்துக் கொள் ளும்படிக்கு கூட்டமாக அவனை சூழ்ந்து கொண்டார்கள். பிரியமான வர்களே, ஆக்கினைக்கு நியமிக்கப்பட்டிருந்த நம்மிடத்தில் அன்புகூர்ந்த ஆண்டவராகிய இயேசு, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங் களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கின்றார். நம்முடைய ராஜ்யம் இந்த பூமிக்குரியதல்ல. வரவிருக்கும் பரலோகத்தை நாடி நாம் யாத்திரிகளாக கடந்து செல்கின்றோம். அந்த நிலையான ராஜ்யத்தில், நமக்கு ஜீவகிரீடம் சூடும்வரைக்கும், இந்த பூமியிலே கொஞ்சக் காலம் தரித்திருக்கின்றோம். நம்மை மறுபடியும் கீழ்படியாமையின் பிள்ளைக ளாக்கி ஆக்கினைக்கு உட்படுத்தும்படிக்கு இரவும் பகலும் எதிராளி யாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றித் திரிகின்றான். எனவே, கர்த்தர் தந்திருக்கும் வேதத்தின் பாதுகாப்பு வலயத்திற்குள் பொறுமையோடு தரித்திருங்கள். வாழ்வில் சுதந்திரம் வேண்டும் என்று தேவன் ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பை உடைத்துப் போடாதி ருங்கள். நான் பெலமுள்ளவன், நான் என்னை பாதுகாத்துக் கொள்வேன் என்று உங்களது சுயபுத்தியின்மேல் சாராமல், ஏற்றகாலத்தில் கர்த்தர் உங் களை உயர்த்தும்வரை அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் என் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் ஒழுங்கு முறைகளை நான் என் சுய இஷ்டப்படி உடைத்துப் போடாதபடிக்கு பொறுமையுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:5-6

Category Tags: