புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 13, 2021)

இரக்கத்தை காண்பியுங்கள்

மத்தேயு 5:7

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.


ஒரு கிராமத்திலே, வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தன் குடும்ப கஷ்டத்தின் மத்தியில், பிழைப்பதற்கு வழி தெரியாமல், ஒரு கடையிலே களவு செய்யும் போது கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டான். இதனிமித்தம் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அவனை பிடித்து கட்டி வைத்து அடித்தார்கள். அந்தக் காட்சியை கண்ட, அவ்வழியாக வந்த ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரிய ரொருவர், அந்த வாலிபன்மேல் பரிதா பப்பட்டு, அவனை அடிப்பவர்களை நோக்கி: பிள்ளைகளே, அவனை அடிக்காதேயுங்கள். என்னிமித்தம் அவனை விட்டுவிடுங்கள். அவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுங்கள். அவன் செய்த களவுக்குரிய கிரயத்தை கொடுப்பதற்கு என்னிடத்தில் பணமில்லை, ஆனால் அந்த அளவிற்குதக்கதாக நான் உங்களுக்கு வேலை செய்கின்றேன் என்று தயவாக கேட்டுக் கொண்டார். அந்த கிராமத்திலுள்ளவர்கள்: ஐயா, நீங்கள் எல்லாம் எதற்கு இந்த திருந்தாத கள்வனுக்காக இப்படியெல்லெலாம் பேசுகின்றீர்கள் என்று கூறி அந்த ஆசிரியருக்கு இருந்த நன்மதிப்பினிமித்தம் அந்த வாலிபனை விட்டு விட்டார்கள். அந்த ஆசிரியர் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அந்த வாலிபனை நோக்கி: மகனே, ஏன் உன் வாலிப நாட்களை வீணாக்குகின்றாய். உழைப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டே என்று கூறினார். அந்த ஊரைவிட்டு சென்ற வாலிபனின் மனதிலே அந்த ஆசிரியரின் கண்ணீர் நிறைந்த கண்களின் காட்சி வந்து கொண்டே இருந்தது. அந்த ஆசிரியர் ஏன் எனக்காக கண்ணீர்விட்டார் என்ற கேள்வி அவன் வாழ்க்கையிலே அவனது இருத யத்திலுள்ள பெரிதான மாற்றத்தை உண்டாக்கியது. அவன் தான் உழை த்து முன்னேற வேண்டும் என்று கடும் பிரயாசப்பட்டு, நல்வாழ்வை தெரிந்து கொண்டான். பிரியமானவர்களே, பணம் மற்றும் சரீர உதவிகள் மட்டுமல்ல, மெய்யான அன்போடு கூடிய உங்கள் வார்த்தைகளும் சில மனிதர்களின் வாழ்க்கையை நன்மையானதாக மாற்றும். ஒருவேளை அப்படி மாற்றவிட்டாலும், உங்கள் இரக்கமுள்ள மனதைக் காணும் பரம பிதா உங்கள் வழியாக மகிமைப்படுவார். குற்றம் செய்தவர்கள் மட் டுமல்ல, உங்கள் நல்ல மனதை காணும் அயலவர்களும அந்நியர்களும் உங்களைப் போல தாங்களும் மாற வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக மாறிவிடுவார்கள். நீங்கள் பரம பிதாவிற்கு பிள்ளைகள் என்பதை மறந்து போய் விடாதிருங்கள். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள வராக இருப்பதுபோல, நீங்களும் உங்கள் இரக்கத்தைக் காண்பியுங்கள்.

ஜெபம்:

மிகுந்த காருண்யமுள்ள தேவனே, உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அதுபோலவே நானும் மற்றவர்களின் நெருக்கத்தில் இரக்கத்தை காண்பிக்கும் பொருட்டு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - புலம்பல் 3:22