புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2021)

உங்களுக்கு ஆறுதல் உண்டு

1 பேதுரு 4:14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்;


ஒரு மனிதனானவன், தன் உறவினனொருவனுக்கு ஆபத்துக் காலத் திலே எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் நன்மை செய்தான். காலங்கள் கடந்து சென்றபோது, அந்த மனிதன் செய்த நன்மையை மறந்து, அந்த உறவினன், நன்மைக்கு பதிலாகத் தீமை செய்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே, இந்த உலகத்தின் வழக்கப்படி அந்த மனிதனானவன் செய்யக்கூடிய நியாயமான காரிய ங்கள் என்ன? அந்த உறவினனோடே வாக்குவாதம் கொள்ளலாம். அவனை அவமானப்படுத்தும் வார்த்தைக ளைப் பேசலாம். பலர் முன்னிலை யிலே நியாயம் கேட்கலாம். இந்த உலகிலுள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதைவிட மேலாக ஆண்டவர் இயேசுவின் கரத்திலே யாவற்றையும் ஒப்புக் கொடுத்து விட்டு, கிறிஸ்துவின் நிமித்தம் அந்த கசப்பான அனுபவத்தை சகித்துக் கொண்டிருக்கலாம். நற்கிரியைகளை செய்வதில் சோர்ந்து போகாதிரு ங்கள் என்று கூறும் போது, பொதுவாக, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே முதலாவதாக மனிதர்களின் மனதிலே தோன்றும் எண்ணமாக இருக்கின்றது. அனுதின பாடுகளின் மத்தியிலும் ஏழை எளியவர்களுக்கு நாம் இரக்கம் காண்பிப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதுமட்டும் நற்கிரியை அல்ல. பிரியமானவர்களே, நாம் கிறி ஸ்துவின் பொருட்டு நெருக்கப்படும் போது, பாடுகளை சகித்துக் கொண் டால், அது தேவனுடைய பார்வையிலே பெரிதான, நற்கிரியையாக இரு க்கின்றது. இந்த உலகத்திலே உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். உலகத்திலே ஆண்டவர் இயேசு, தமக்கு உண்டான உபத்திரவங்களை எப்படியாக மேற் கொண்டார்? என்னுடைய சித்தப்படி அல்ல, உம்முடைய சித்த ப்படி எனக்கு ஆகட்டும் என்று தன் பிதாவாகிய தேவனுக்கு தன்னை உகந்த பலியாக ஒப்புக் கொடுத்தார். தன்னைத் துன்பப்படுத்துகின்ற மனிதர்களை தண்டிக்கும்படியாக பிதாவை வேண்டிக் கொள்ளாமல், பிதாவே இவர்களை மன்னியும் என்று அவர்களின் அறியாமைக்காக பிதாவிடம் ஜெபம் செய்தார். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். பிரியமானர்களே, கண்ணீரின் மத்தி யிலும் உபத்திரவங்கள் மத்தியிலும் நன்மை செய்யுங்கள். ஈடு இணை யில்லாத மகிமை இதனால் உங்களுக்கு உண்டு.

ஜெபம்:

துயரப்படுகின்றவர்கள் ஆறுதலடைவார்கள் என்று சொன்ன தேவனே, நான் தீமைக்குத் தீமை செய்யாமல், நன்மை செய்து பாடனுபவிப்பதையே தெரிந்து கொள்ளும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:4