புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 11, 2021)

கெம்பீரமான அறுவடை

சங்கீதம் 126:5

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.


அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுகள் போதும் என்ற பிரகாரமாக அவனது வாழ்க்கை படகில் அலைகள் மோதிக் கொண்டே இருந்தது. காலநிலையோ அவனுக்கு சாதகமாகத் தெரியவில்லை. இளமைக் காலத்தில் இருந்தது போல பெலமிக்க உடல்நிலை இல்லை. ஆனாலும் அவைகள் யாவற்றின் மத்தியிலும், அந்த விவசாயியானவன், தன் கலப்பையை எடுத்துக் கொண்டு வயல் உழுது பண்படுத்திக் கொண் டிருந்தான். குறித்த காலத்திற்குள் எப்படியாவது நிலத்தை பண்படு த்தி, விதைகள் விதைக்க வேண்டும் என்று பல கஷ;டங்கள் மத்தியிலும் அயராது உழைத்தான். அவனைச் சூழ்ந்திருந்த நெருக்கங்கள் அவன் விதைகளை விதைப்பதற்கு தடை யாக இருக்கவில்லை. குறித்த காலத்திலே மழைபெய்யும் என்ற நம்பி க்கையோடு அவன் பிரயாசப்பட்டான். ஆனாலும் காலம் நிறைவேறி யபோது, தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வந்தான். பிரியமானவர்களே, கண்ணீரோடு விதைக்கின்றவர் கள் கெம்பீரத்தோடே அறுக்கின்றார்கள். எனவே, வாழ்வின் எந்த நெரு க்கங்களும் நாம் விதைகளை விதைப்பதற்கு நமக்கு தடையாக இருக்க க்கூடாது. அதாவது, நமக்கிருக்கும் பலத்தின்படி நாம் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை நடப்பிக்க வேண்டும். பாடுகளும் நெருக்கங்களும் நம் வாழ்க்கையை சூழ்ந்து கொள்ளும் போது, நாம் முன்னெடுக்கும் நற் செயற்திட்டங்களை குறித்த சோர்வு மனதிலே உண்டாகும். 'இத்தனை காலமாக எத்தனையோ நன்மைகளை செய்தேனே, என்னத்தைக் கண் டேன்' என்ற சத்தங்கள் நமது மனதிலே தொனிக்கும். நாம் செய்யும் நற்கிரிகளானது அற்பமானதும் பிரயோஜனமற்றதும் என்று சிந்திக்கத் தூண்டும். எப்படியாக சிறிய விதையானது முளைத்து, பெரும் விருட் சமாகி, பல மக்களுக்கு சுவையான கனிகளைக் கொடுக்கும் மரமாகவும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருப்பது போல, நீங்கள் மனதார செய்யும் சிறிய நற்கிரியைகள், அதன் காலத்தில் பெரிதான பலனைக் கொடுக்கும். எந்த காலமாக இருந்தாலும், மனுஷன் எதை விதை க்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கி றவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்;; ஆவிக்கென்று விதைக்கி றவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். எனவே நீங்கள், நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருங்கள். நீங்கள் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அதில் பலனை அறுப்பீர்கள்.

ஜெபம்:

நற்கிரியைகளை ச் செய்ய பெலன் தரும் தேவனே, நெருக்கங்கள் மத்தியிலும் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை செய்யும்படிக்கு என்னை பெலப்படுத்தி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:9