புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2021)

நீதிக்குரிய ஆயுதங்கள்

ரோமர் 6:13

உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்


நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒரு வன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடு ப்பார்;; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். அதை நாம் சுயநீதி, சுயஇச்சை நிறைவேற்றுவதற்கும், சுய நலத்திற்காகவும், சுய இலாபத்திற்காகவும் பயன்படுத்தினால், அது தேவ னுடைய வீடாக இருக்குமோ? அல் லது கள்வர் குகையாக இருக்குமோ? என்பதை குறித்து நீங்கள் சிந்தனை செய்யுங்கள். நமது மாம்சமானது நம் மில் தேவநீதி நிறைவேறுவதற்கு எதி ராகவே இச்சிக்கின்றது. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கி ன்றன அவையாவன: விபச்சாரம், வேசி த்தனம், அசுத்தம், காமவிகாரம், விக் கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங் கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறா மைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளுக்கு ஒருவன் தன் இருதயத்திலே இடங்கொடுத்துக் கொண்டு, நான் தினமும் ஜெபிப்பவன் என்று கூறுபவனாக இருப்பா னானால் அந்த ஜெபம் தேவனுக்கு பிரியமானதாய் இருக்க மாட்டாது. தன் இருதயத்தை கள்வர் குகையாக வைத்திருப்பதற்கு இடங் கொடு ப்பவன், எந்த சபை ஐக்கியத்திற்குச் செல்லும் போதும், அவன் வழி யாக தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்கள் நடப்பிப்பதற்கு அவன் ஒரு ஊடகமாக தன்னை ஒப்புக் கொடுகின்றான். அப்படிப்பட்டவன், தன் கிரியைகளை நியாயப்படுத்த முயற்ச்சி செய்வதால், அவனைப் போல சிந்திக்கின்றவர்கள், அவனோடு இணைந்து, சபை ஐக்கியத்திலே பிரி வினைகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். பிரியமானவர்களே, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? குpறி ஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவா சிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக் குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்க ளாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவ னுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. எனவே பரிசுத்தமானதை நடப்பிக் கும்படி உங்கள் அவயவங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, என்னுடைய உள்ளம் நீர் தங்கும் ஆலயம் என்ற உணர்வு என்னில் பெருகவும், என் உள்ளத்தை நான் கள்வர் குகையாக மாற்றாதபடிக்கும் என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 3:16