புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2021)

என்னுடைய வீடு ஜெப வீடு

மத்தேயு 21:13

என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது;


ஒரு சமயம், யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அப் பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள், புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு பண்ணி, அவர்கள் யாவரையும், ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகை களைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற் கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்;;; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். தேவனுடைய ஆலயம் எதற்காக அமை க்கப்பட்டிருக்கின்றது? நாம் ஏன் அங்கே செல்கின்றோம் என்பதைக் குறித்து நாம் எப்போதும் விழிப்பு ள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவ பிள்ளைகள் ஒருமனப்பட்டுக் கூடிவரும் ஸ்தானத்திலே தேவனுடைய பிரசன்னம் இருக்கும். அங்கே பயபக்தியோடு கூடிய தேவ பயம் இருக்கும். அந்த இடத்திலே தேவனாகிய கர்த்தருடைய நாமம் மகிமைப் படும். அந்த வேளையிலே தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே தேவனுக்கு பிரியமான மாறுத ல்கள் உண்டாகும். அந்த இடத்திலே மனிதர்களுடைய விருப்;பங்கள் அல்ல, அங்கு வரும் விருந்தாளிகளுடைய திட்டம் அல்ல. சர்வ வல்ல மையுள்ள தேவனுடைய விருப்;பமும், உன்னதமான தேவனுடைய திட்ட மும் இருக்கும். இவைகளோடு தங்கள் சுய ஆதாயத்திற்காக, தங்கள் சுய திட்டங்களுக்காக, தங்கள் மன விருப்பங்களுக்காக காரியங்களை நடப்பிக்கின்றவர்கள், தேவனுடைய ஆலயத்தை கள்ளர் குகையாக மாற்றுகின்றார்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறபடி தேவனுடைய ஊழியத்தை நடப்பிக்கின்றவன் தன் வாழ்வாதாரத்திற்குரிய கூலியை பெறுகின்றான். அது சுய ஆதாயம் அல்ல. ஆனால் தேவன் குறித்த எல்லையை மீறி, தேவ ஆராதனைகள் நடக்கும் இடங்களை சொந்த நோக்கங்களை நிறைவேற்றும் இடமாக மாற்றி, தேவனுடைய காரியங்களோடு இந்த உலகத்திற்குரிய காரியங்களை இணைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் தங்கள் வியாபார தொடர்புகளை ஏற்படுத்தும்படிக்கும், தங்கள் பிள்ளை களின் திருமணத்திற்காகவும், தங்கள் இன்ப துன்ப நாளிலே தங்களு க்கு ஒரு போதகர் தேவை என்பதற்காகவும் ஆலயத்திற்கு செல்கி ன்றார்கள். எந்த நோக்கத்திற்காக ஒருவன் ஆலயத்திற்கு செல்கின் றானோ, அவன் இருதயமும் அதையே நோக்கிக் கொண்டிருக்கும்.

ஜெபம்:

உள்ளத்தின் நினைவுகளை அறிந்த தேவனேஇ நித்திய ஜீவனுக்கென்று நீர் நியமித்த ஒழுங்குகளை நான் சொந்த நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்தாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 143:10