புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2021)

ஆதி நிலைக்குத் திரும்புங்கள்

வெளிப்படுத்தல் 2:5

நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக


புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் வாழ்க்கை முறையை அவதானித்த பலர் அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண் டுள்ள அன்பையும் ஐக்கியத்தையும் குறித்து மெச்சிக் கொண்டார்கள். காலங்கள் கடந்து செல்லும் போது, வாழ்க்கையிலே ஏற்பட்ட எதிர் பாராத நிகழ்வுகள் அவர்களுடைய ஐக்கியத்தை தளரச் செய்தது. அதன் அடிப்படை காரணத்தை அறிந்து அதை சரி செய்து கொள்வதற்கு பதி லாக, பல மாற்று வழிகளை அவர் கள் செய்ய ஆரம்பித்தார்கள். இருவ ரும் அதிக நேரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தை குறை த்துக் கொண்டார்கள். விடுமுறை நாட்களிலே நண்பர்களோடு சேர்ந்து உல்லாசப் பயணங்கள் செய்வதால், அவர்களுக்கிiடேய வாக்குவாதங் கள் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் இல் லாதிருந்தது. தங்கள் வாழ்வின் அஸ்திபாரத்தை உறுதிப்படுத்தும் வழி களுக்கு திரும்பாமல், தாங்கள் இன்னும் தம்பதிகள் என்று காட்டிக் கொள்வதற்காகவே பல பக்க வழிமுறைகளை ஏற்படுத்தியிருந்தார்கள். இவர்களது முடிவு எப்படியாக இருக்கும்? பிரியமானவர்களே, தேவ னோடு நாம் கொண்டுள்ள உறவு ஆதியிலிருந்தது போல இப்போதும் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது ஆண்டவராகிய இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளிலே, நாம் எப் படியாக அவரிலே நிலைத்திருந்தோமோ, அப்படியாகவே நாம் எப்போ தும் அவரில் நிலைத்திருக்க வேண்டும். நாம் பரலோகத்திலிருந்து ஈவாக பெற்றுக் கொண்ட தேவனுடைய ஆவியானவரே நம்மை சகல சத்தி யத்திலும் நடத்தி, தேவனை அறிகின்ற அறிவிலே நம்மை வளரச் செய் கின்றார். அந்த வழிநடத்துதலை தேவ பிள்ளைகள் தள்ளிவிடும் போது, ஆதி அன்பிலிருந்து அவர்கள் விழுந்து விடுகின்றார்கள். தாங்கள் விழு ந்த இடத்திலிருந்து எழும்புவதற்குப் பதிலாக, தாங்கள் விழுந்த நிலை யிலே இருந்து கொண்டு, தாங்கள் தேவ பிள்ளைகள் என்று காண்பி க்கும் பொருட்டு துதி ஆராதனை முறைமைகளையும், பிரசங்க முறை மைகளையும், ஆலய அலங்காரங்களையும் மாற்றி, சுயாதீனம் என்ற போர்வையிலே பரிசுத்த குலைச்சலுக்கும் இடங் கொடுத்து, அவைக ளினாலே மனிதர்களை கவர்ந்து கொள்ள முயற்சி செய்கின்றார்கள். நீங் களோ, அப்படியிராமல், ஆவியானவரின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்திருங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, ஆரம்பத்திலே நான் உம்மோடு கொண்டிருந்த உறவிற்கு திரும்புவதற்குப் பதிலாகஇ மாற்று வழிமுறை களை நான் கை கொள்ளாதபடிக்கு, எப்போதும் ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 3:19