புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 07, 2021)

யாரை பிரியப்படுத்துகின்றேன்?

கலாத்தியர் 1:10

இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்?


ஆகாப் என்னும் இஸ்ரவேலின் ராஜா, தனக்கு முன்னிருந்த எல்லாரை ப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அவன் பாகாலை சேவித்து அதைப் பணிந்துகொண்டு, அதற்கு கோவி லையும் பலிபீடத்தையும் கட்டி, ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்தி ருந்தான். அவன் மனைவியாகிய யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் அநேகரை கொலை செய்தாள். அந்நாட்களிலே, கர்த்தருடைய தீர்க்க தரிசியாகிய எலியா, பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேர் முன்னிலையில் தனியாக நின்று, கர்த்தரே மெய்யான தெய்வம் என்று காண்பிக்கும்படிக்கு, பலி பீடத்தை செப்பனிட்டு தேவனுக்கு உகந்த பலியை ஏறெடுத்தான். கர்த்தர், தாம் ஒருவரே மெய்யான தேவன் என்று காண்பிக்கும் பொருட்டு, வானத்திலி ருந்து, ஜனங்கள் யாவரும் காணு ம்படி அக்கினியால் பதிலளித்தார். இன்று நாம் தேவனுக்கு உகந்த ஆராதனை செய்யும்படிக்கு, நம்மு டைய இருதயங்கள் செப்பனிடப்பட வேண்டும். நம் இருதயங்கள் யாவும் தேவனுக்கு உகந்த வாசனையாக செப்பனிடப்பட்டிருந்தால், நாம் வெளி யரங்கமாக செய்யும் செயற்பாடுகளும் தேவனுக்கு உகந்ததாக இரு க்கும். தேவன் முகத்தையல்ல, இருதயத்தையே பார்க்கின்றார் என்று கூறிவிட்டு, நாம் செய்யும் வெளியரங்கமான கிரியைகளை மனிதர்க ளுடைய எண்ணப்படி நாம் செய்துவிட முடியாது. இன்று பலர், காவல் களிலும், முகாம்களிலும், தெருவோரங்களிலும், மரங்களின் நிழல்களிலு மிருந்து தேவனை ஆராதிக்கின்றார்கள். இதை அவர்கள் திட்டமிட்டு செய்யவில்லை, மாறாக, அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின் றார்கள். ஆனால், இன்று பல ஆலயங்களிலே, தேவனை ஆராதிக்கும் இடங்கள் பலவிதாமாக அமைக்கப்பட்டு வருகின்றது. முன்பிருந்த தேவ னுடைய வசனங்களும், சிலுவையின் சின்னமும் மேடைகளிலிருந்து அக ற்றப்பட்டு, நவீன அலங்காரங்களால் அலங்கரிக்கப்படுகின்றது. இவை களை ஏன் செய்கின்றார்கள்? தேவனை கவர்ந்து கொள்ளும்படியா கவா? அல்லது மனிதர்களை கவர்ந்து கொள்ளும்படியாகவா? பல மனிதர்களையும், இளந்த தலைமுறையினரையும் கவர்ந்து கொள் வதினால் அவை தேவனுக்கு பிரியமாக இருக்கக் கூடுமோ என்று ஒவ் வொருவரும் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் மனுஷரைப் பிரியப் படுத்துகிறவர்களாயிருந்தால், நாம் கிறிஸ்துவின் ஊழியர்களாக இரு க்க முடியாது.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, என் வெளியரங்கமான கிரியைகளின் உள்ளான நோக்கமானது உமக்கு உகந்தனவைகளாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2