புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 06, 2021)

உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப்பலி

சங்கீதம் 51:17

தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.


தாவீது ராஜா, துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்க ளால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்று லேவியர்களின் வகுப்புகளின்படி அவர்களைவகுத்தான். மேலும் எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும்; யாழோடும் தீங்குழலோடும், ஓசையுள்ள கைத்தாளங்களோடும், பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் கர்த்தரை துதியுங்கள் என்று பல சங்கீதங்களிலே எழுதியிருப்பதையும் நாம் காணாலாம். தேவனாகிய கர்த்தர் தாவீது ராஜாவின் ஆராதனையை அங்கீகரித்தார். அன்றைய நாட்களிலே, ஆட்டுக்கடாக்களையும், மிருகங்கள் பறவைகள், தானியங்க ளையும் தேவனுக்கு பலியாக மனிதர்கள் ஒப்புக்கொடுத்தார்கள். எரு சலேம் தேவாலயத்தின் பிரதிஷ்டையின் போது, சாலொமோன் ராஜா திரளான பலிகளை கர்த்தருக்கு ஏறெடுத்தார். அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பலி கொடுத்த ஜனங்களின் இருதயங்களும் தேவனுக்கு ஏற்புடையதாக இருந்தது. காலங்கள் கடந்து சென்றதும், தீர்க்கதரிசிக ளின் நாட்களிலே, உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் கூறினார் (ஏசாயா 1:11). தேவனுக்கு பிரியமான ஆராதனையை செலுத்தி வந்த தாவீது ராஜாவும் தன் சங்கீதமொன்றிலே: பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக் குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதானே. தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்று தேவனுக்கு பிரியமான பலி எதுவென்பதையும் விளக்கிக் கூறியிருக்கின்றார். இன்று நாம் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலிகளை செலுத்துகின்றோம். நாம் திரளான ஜனங்களோடு கூடி, எண்ணற்ற ஸ்தோத்திரபலிகளை அவருக்கு ஏறெடுக்கலாம், ஆனால் நாம் ஏறெடுக்கும் ஆராதனை தேவனுக்குச் சுகந்த வாசனையாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய வாயின் வார்த்தைகள் மட்டு மல்ல, நம்முடைய இருதயங்களின் தியானங்களும், தேவனுடைய பார் வையிலே ஏற்புடையதாக இருக்க வேண்டும். எனவே, இந்த பிரபஞ் சத்திற்கு ஒத்த வேஷம் தரித்து, அதனால் தேவனை பிரியப்படுத்த முயற்சி செய்யாமல், தேவனுடைய வார்த்தைக்கு நம்மை நாம் அர்ப்பணித்து வாhழும் போது, நம்முடைய துதியிலே தேவன் பிரியப்படுவார்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை என்று அறிந்த நாம், நிலையான நகரமாகிய பரலோகத்திற்கேற்ற துதியை ஏறெடுக்க எனக்கு கற்றுக் கொடுப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:15