புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2021)

ஆராதனைக்கு அவசியமானவைகள்?

சங்கீதம் 29:2

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.


சில தசாப்தங்களுக்கு முன்னராக, மூன்றாம் உலக நாடுகளொன்றில் வசித்து வந்த வசதியுள்ள குடும்பத்தினர், தங்களுடைய 17 வயதுள்ள மகனானவனை உயர்கல்வி படிக்கும்படியாக ஒரு தனியார் கல்வி நிலையமொன்றிலே சேர்த்து விட்டார்கள். மகனானவன் தன் பெற் றோரை நோக்கி: நீங்கள் எனக்கு கார் வாங்கி கொடுத்தாலொழிய நான் அங்கு படிக்கச் செல்ல மாட்டேன் என்று பிடிவாதாமாக இருந்தான். அவன் கல்வி கற்க வேண்டும் என் பதற்காக அவன் பெற்றோர் அவ னுக்கு ஒரு காரை வாங்கி கொடு க்க வேண்டியதாயிற்று. தன் வாழ் வின் முன்னேற்றத்திற்காக கல்வி கற்பதற்கு கார் அத்தியவசியமான தேவை என்று அவன் எண்ணிக் கொண்டான். இந்த நிலை எப்படியா யிற்று? சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வண்ணமாக மனிதர்கள் தங் களது வாழ்வின் முக்கியமான காரியங்களை நடப்பிப்பதற்குரிய தேவை என்ன என்பதை மறந்து விடுகின்றார்கள். இன்றைய உலகிலே, தேவனை ஆராதிப்பதற்கு அவசியமானது என்ன என்ற கேள்விக்குரிய பதிலும்; இவ்வண்ணமாகவே மாறிக் கொண்டே போகின்றது. ஒலிப்பெருக்கி சாத னங்கள், பல இசைக்கருவிகள், கம்யூட்டர் சாதனங்கள், இனிமையான பாடல்கள், அடுக்கடுக்கான வார்த்தைகளை பேசுபவர்கள், பிரபல்ய மான மனிதர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இவை கள் தொலைக் காட்சிகளிலும், இன்ரநெற் ஊடகங்கள் வழியாகவும் பார்க்கும் இளயதலை முறையினரும், எளிமையான சபைகளிலே தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து வரும் தேவ பிள்ளைகளும் தேவனை துதிப்பதன் கருப்பொருளை மறந்து போய்விடுகின்ற கால மாக இருக்கின்றது. சிலர், தேவனாகிய கர்த்தர் நியமித்த வாழ்வின் ஒழுங்குகளை வியாபாரமயமாக்குவதைப் போல, தேவனைத் துதிப்ப தின் கருப்பொருளை மேன்மைப் படுத்தாமல், மனிதர்களின் உள்ளத்தை கவரும் காரியங்களிலே அதிக கவனத்தை செலுத்துகின்றார்கள். பிரிய மானவர்களே, விழிப்புள்ளவர்களாய் இருங்கள். இடமும் பொருளும் தேவனை கவர்ந்து கொள்ளக் கூடுமோ? இவைகள் யாவும் இருந்தும் நம்முடைய இருதயம் கர்;த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை செலு த்தாவிட்டால், நாம் செய்யும் எந்தக் காரியமும் தேவனுக்கு பிரியமாக இருக்கப் போவதில்லை. வாத்தியக் கருவிகள் உள்ளவர்கள்; அவை களை நேர்த்தியாக வாசியுங்கள். இல்லாதிருந்தால் உங்களிடம் இருப்ப தைக் கொண்டு, ஆவியோடும் உண்மையோடும், பரித்த அலங்காரத் தோடும் தேவனைக்கேற்ற ஆராதனையை செய்யுங்கள்;.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமத்திற்குரிய மகிமையை உமக்குச் செலுத்தி, பரிசுத்த அலங்காரத்தோடு உமக்குப் பிரியமான ஆராதனைனை செய்ய உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 4:24