புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 02, 2021)

குறைவற்ற வேதம்

சங்கீதம் 19:7

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;


தாவீது ராஜாவின் குமாரனாகிய சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாகியபோது, தேவனாகிய கர்த்தரிடத் திலே அன்புகூர்ந்து அவர் கட்டளைகளிலே நடந்தான். தன் ராஜ்யத்திலி ருந்த ஏராளமான ஜனங்களை நியா யம் விசாரிக்கும்படி ஞானமுள்ள இரு தயத்தைத் தந்தருளும்; என்று தேவனி த்திடத்திலே கேட்டான். இந்தக் காரிய த்தைக் கேட்டது ஆண்டவருடைய பார் வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந் தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்க ளைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியி னால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை என்று அவனை ஆசீர்வதித்தார். சாலொமோன் ராஜா, தேவன் கொடுத்த ஞானத்தின்படி, நம் நடைகளை நாம் காத்துக் கொள்ளும்படி பல தேவ ஆலோசனை களை நமக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வார்த்தைகள் உண்மையுள்ள வைகள். கர்த்தருடைய வேதம் குறைவற்றது. ஆனால், சாலொமோன் வயது சென்ற போது, தேவன் கொடுத்த வார்த்தைகளை மீறி நடந் ததால், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து அந்நிய தேவர்களைப் பின்பற்றிப் போனான். அவன் நிறைவான கர்த்தருடைய வேதத்தை தள்ளி விட்டதால், தேவன் சாலொமோன் ராஜா வழியாக நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய ஆலோசனைகளை நாம் தள்ளி விட முடியாது. நாம் சாலமோன் ராஜாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி செல்பவர்கள் அல்லர். மாறாக, சாலமோன் ராஜா வழியாக தேவன் நமக்குத் தந்த ஆலோசனைகளையும், புத்திமதிகளையும் ஏற்று, தேவனு டைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அந்த கட்டளைகளின்படி நம்மு டைய இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். எனவே, மற்றவர்களின்வாழ்வில் ஏற்படும் தவறுகளால், வாழ்வு தரும் வேத த்தை அசட்டை பண்ணாத படிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்குரிய ஆலோசனைகளை தந்த தேவனே, மற்ற வர்கள் உம் ஆலோசனைகளை தள்ளிவிடுவதால், நானும் அவைகளை தள்ளிவிடாதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8