புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2021)

புத்திமதியை ஏற்றுக்கொள்

நீதிமொழிகள் 19:20

உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.


தொற்று நோய்க் கிரிமியின் வீரியம் பயங்கரமாக இருப்பதால், அநாவ சியமாக வெளியிலே சென்று வருவதைக் குறித்து எச்சரிக்கையாயிரு ங்கள் என்று ஒரு மனிதனானவன், தன் நண்பர்களுக்கு அறிவுரை கூறினான். நண்பர்களில் ஒருவன் அதற்கு மறுமொழியாக: நீ தானே, எல்லாருடைய அறிவுரையையும் அசட்டை செய்து கண்டபடி அலைந்து திரிந்து, நோய்வாய்ப்பட்டு மரணப்படுக் கையிலே இருந்தாயே, இப்போது நீ எங்களுக்கு அறிவுரை கூறுகின்றாயா என்று அவனைக் கேலி செய்தான். அத ற்கு அந்த மனிதன்: நண்பா, நான் அறிவரையை அசட்டை செய்து கண்ட படி அலைந்து திரந்தது உண்மையே, அதனால் எனக்கும் என் குடும்பத்திற் கும் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்களின் நோவை நான் அனுபவித்தபடியால் தான்; இவற்றை உங்களுக்கு கூறுகின்றேன் என்று பதில் கூறினான். 'எங் களுக்கு உபதேசிப்பதற்கு இவர் யார்? எங்களுக்கு அறிவுரை கூறும் அந்த மூப்பரின் முந்நிலைமையானது எங்களுக்குத் தெரியும். உங்களு டைய பிள்ளைகள் செய்யாததையா எங்கள் பிள்ளைகள் செய்கின்றார் கள்' இப்படியாக தங்களுக்கு ஆலோசனை கூறும் ஊழியர்கள், மூப் பர்களுக்கு எதிராக சில தேவ பிள்ளைகள் குரல் எழுப்புகின்றார்கள். யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றது. அதன்படி உங்களுக்கு ஆலோசனை கள் கூறப்படும் போது, முதலாவதாக, அந்த ஆலோசனையை கேளு ங்கள். அதை வேத வசனங்களுடன் ஆராய்ந்து பாருங்கள். பின்பு, உங் கள் வாழ்க்கையோடு தியானியுங்கள். உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களு க்குப் புத்திசொல்லுகிறவர்களை கனத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை ஆலோசனை கூறுபவர்களில் சிலர் சில தவறுகளை விட் டுவிடுவதால், நாம் தேவனுடைய போதகத்தை தள்ளிப் போடக்கூடாது. இன்று நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த ஆண்டிலே எனக்கு தேவ ஆலோசனைளை கூறினவர்களை நான் கனப்படுத்தினேனா அல்லது அவமதித் தேனா? ஆலோசனையை கூறும் போது என்ன செய்தேன்? நாம் ஞான முள்ளவர்களாக இருக்கும்படிக்கு ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடக்கக்கடவோம்.

ஜெபம்:

ஆலோசனை தந்து நடத்தும் தேவனே, உம்முடைய ஆலோச னைகளை கூறுகின்றவர்களை நான் மதித்து, அதன்படி என் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து உம் வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:12