புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2021)

அன்பு பெலன் தெளிந்த புத்தி

2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பல மும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.


மனந்திரும்புதல், மறுரூபமடைதல், தேவ சாயலிலே வளருதல், உள்ளான மனிதன புதிதாக்கப்படுதல், தேவ சித்தத்தை நிறைவேற்றுதல் என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்பதால் சலிப்படைந்து போய்விடாதிருங்கள். 'எனக்கிருக்கும் பிரச்சனைகள் போதும், இவை களை சிந்திக்க நேரமில்லை' என்று சிலர் கூறிக் கொள்வதுண்டு. பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும் போதே நாம் இவைகளை அதிக மாக சிந்திக்க வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் பிதாவாகிய தேவ னுடைய சித்தத்தை நிறைவேற்று வதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். வாழ்வில் புயல் சூழந்து கொள்ளும் போது, அதை என்னுடைய தீர்மானத்தின்படி நான் மேற்கொள்ளுவேன் என்று இருக் கும் மனிதர்கள் தங்கள் சுயபுத்தியின்மேல் சார்ந்து கொள்கின்றார்கள். அதனால் இன்னும் அதிக நோவுகளை தங்கள் வாழ்வில் வருவித்துக் கொள்கின்றார்கள். எனவே மனந்திரும்புதல், மறுரூபமடைதல், தேவ சாயலிலே வளருதல், உள்ளான மனிதன் புதிதாக்கப்படுதல், தேவ சித்தத்தை நிறைவேற்றுதல் என்பது நம் வாழ்வில் நம்முடைய விருப்ப ப்படி செய்யலாம் அல்லது விரும்பாத வேளைகளிலே விட்டுவிடலாம் என்று கூற முடியாது. இவைகளை நாம் செய்வதற்கு, நம்முடைய துன்ப துயர நேரங்களில் தேவன் நம்மை தனிமையில் தவிக்க விட்டு விடுவதில்லை. நம்முடைய கால்கள் சறுக்கும் வேளைகளிலே அவர் நமக்கு துணையாக வருகின்றார். நம் வாழ்விலே வரும் பயங்கரங் களையும், துன்பங்களையும் கண்டு பயந்து நடங்கி, ஒடுங்கிப் போகு ம்படிக்கு நாம் பயமுள்ள ஆவியை பெறவில்லையே. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியு முள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். நம்முடைய பலவீனங்கள் என்னவென்று நம் ஆண்டவராகிய இயேசு அறிந்திருக்கின்றார். அவர் இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே எல்லாவிதத்திலும் நம்மை ப்போல் சோதிக்கப்பட்டார் ஆனாலும்; அவர் பாவம் செய்யாமல், எல்லாச் சோதனைகளையும் மேற்கொண்டு வெற்றி சிறந்தார். அவரே நம்முடைய பிரதான ஆசாரியராக இருப்பதால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

ஜெபம்:

முடிவில்லாத வாழ்வை தருவேன் என்ற தேவனே, இந்த உலகத்திலே நெருக்கங்கள் ஏற்படும் போது நீர் என்னோடு இருந்து அவைகள் மத்தியிலும் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபி 4:15-16

Category Tags: