புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 30, 2021)

பொல்லாப்புக்கு விலக்கிக் காத்தருளும்

சங்கீதம் 119:92

உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.


ஒரு ஊரிலே மிகவும் பலசாலியான மனிதனொருவன் இருந்தான். அந்த ஊர் வழியாக சென்று கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கும் அவனுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், முற்கோபியாகிய வழிப் போக்கன் அந்த மனிதனுடைய கன்னத்திலே அறைந்து விட்டான். மிக வும் கோபமடைந்த பலசாலியாகிய அந்த மனிதன், அந்த வழிப்போ க்கனுக்கு ஒரு பாடம் கற்பிப்பேன் என்று கூறிக் கொண்டு அவனை அடிக்கும்ப டியாக சென்றபோது, அந்த பலசாலி யின் நண்பர்கள் சென்று அவனை சண்டைக்கு செல்ல வேண்டாம் என்று வருந்திக் கேட்டுக் கொண்டு அவ னைத் தடுத்து நிறுத்தினார்கள். அத னால், அன்று நடக்க இருந்த பொல் லாப்பு அந்த பலசாலியின் தலையின் மேல் வராமல் தடுத்து நிறுத்தப்பட் டது. அந்த பலசாலியின் மூர்க்கமாகிய மாம்ச குணமானது நண் பர்களின் நட்பினால் மேற்கொள்ளப்பட்டது. அன்று அந்த பலசாலி தன் நண்பர்கள் தன்னை தடுத்து நிறுத்தியதைக் குறித்து திருப்தியற்றவனாக இருந்தான் ஆனால் பல ஆண்டுகள் சென்ற பின்பு, அன்றைய தினத் தினாலே அந்த வழிப்போக்கனுக்கு நான் பாடம் படிப்பிக்க முயன்றிருந் தால், அவன் அல்ல நானே ஒரு கசப்பான பாடத்தை என் வாழ்விலே கற்றிருப்பேன். அதனால் நானும், என் குடும்பமும், என்னைச் சார்ந்தவ ர்களும், வழிப்போக்கனை சார்ந்தவர்களின் வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாக உணர்ந்து கொண்டான். இப்ப டியாகவே, மனிதர்களுடைய வாழ்க்கையிலே எதிர்பாராத சூழ்நிலைக ளிலே மாம்ச இச்சைகள் நிறைவேற்ற வேண்டும் என்னும் ஆசைகளும், உலக காரியங்களைக் குறித்த கவலைகளும் மனதிலே உண்டாகின்றது. அந்த சூழ்நிலையிலே அவற்றை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே கண்களின் முன்பாக இருக்கும். அந்த வேளைகளிலே தேவனுடைய வார்த்தை, தேவனுக்கு பயப்படும் நண்பர்கள், தேவ னுக்கு பயப்படும் சகவிசுவாசிகள், ஊழியரின் ஆலோசனகைள், வழிநட த்துதல், நம்முடைய மனக்கண்களை பிரகாசமுடையச் செய்யும். நாங் கள் சென்று கொண்டிருக்கும் பாதையிலே அது வெளிச்சத்தை வீசு வதால், அங்கே நம்மை காத்திருக்கும் பொல்லாப்புக்களை நாம் கண்டு அவற்றிலிருந்து விலகிக் கொள்ளலாம். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று அதினால் நாம் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்.

ஜெபம்:

பொல்லாப்புக்கு விலக்கிக் காக்கும் தேவனே, உமக்குப் பயந்து உம்முடைய வழியில் நடப்பவர்களின் ஊடாக உமது ஆலோசனைகளை குறித்த சமயத்தில் நீர் தந்து என்னை காத்து வருவதற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:19-21