புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 29, 2021)

நீ ஏன் அழைக்கப்பட்டாய்?

1 தீமோத்தேயு 6:12

நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்


சபைகளிலே குழப்பங்கள், பட்டணங்களிலே குழப்பங்கள், தேசத்திலே குழப்பங்கள், குடும்பங்களிலே குழப்பங்கள் என்று ஒரு வாலிபன் குழ ப்பமடைந்தான். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;, நீங்கள் உலக த்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;. மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பா கப் பிரகாசிக்கக்கடவது என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். கிறிஸ்தவர்கள் என்ற நாமத்தை தரித்த வர்கள் தங்கள் முன்மாதிரியான வாழ்க் கையை விட்டு விலகும் போது குடும்ப த்தில், சபையில், பட்டணத்தில், தேசத் தில், உலகத்தில் பாதிப்புக்கள் உண்டா கின்றது. அதனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய வார்த் தைகள் அவமாகப் போய்விடுவதில்லை. நித்திய ஜீவன் இல்லாமற் போய்விடுவதில்லை. பரலோகம் பாதிக்கப்படுவதில்லை. 'இயேசு அவர் களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சி ப்பார்கள்.' என்று நம் கர்த்தராகிய இயேசு நமக்கு எச்சரிப்பை முன் கூட்டியே எழுதிக் கொடுத்திருக்கின்றார். எனவே உங்களைச் சூழ நடக் கும் துரோகங்களையும், மறுதலிப்புக்களையும், மாய்மாலங்களையும் கண்டு பின்வாங்கிப் போய்விடாதிருங்கள். நீங்கள் ஏன் அழைக்கப்பட் டீர்கள்? மற்றவர்ளுடைய முன்மாதிரியற்ற வாழ்க்கையின் நிமித்தம் குழ ப்பமடைவதற்காகவா? சிலர் இந்த உலகத்திற்கு பின்னாலே இழுப்பு ண்டு போனபோது, தேவ ஊழியராகிய பவுல் இதைக் குறித்து தீமோத் தேயு என்னும் இளம் ஊழியருக்கு கூறியதாவது. நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி நீதியையும் தேவபக்தியையும் விசு வாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடை யும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தி யஜீவனைப் பற்றிக்கொள்; அதற்கா கவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளு' என்றார். எனவே உங்கள் அழைப்பை மறந்து போகாமல் உறுதியோடு முன்னேறுங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, இந்த உலகத்திலே நடக்கும் வஞ்சகங்களையும், குழப்பங்களையும் கண்டு நான் என் தூய வாழ்க்கையை குழப்பிவிடாமல், நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:4-5