புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 28, 2021)

வினாவுள்ளவர்களாக இருங்கள்

மத்தேயு 10:16

சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.


நாம் சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாகவும் புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருக்க வேண்டும். என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். இன்று சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாய் இருப்பதைக் குறித்து தியானிப்போம். அதாவது, இந்த உலகத்திலே, நம்முடைய பரம தரிசனமாகிய நித்திய ஜீவனை இழந்து போகும்படி க்கு, நம்மை நோக்கி வரும் ஆபத் துக்களைக் குறித்து எப்போதும் நாம் சர்ப்பத்தைப் போல விழிப்புள்ளவர்க ளாக இருந்து, தவறான தீர்மானங் களை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். 'ஏன்' நான் இதை செய்கின்றேன் என்று திரும்பத் திரு ம்ப கேட்பதினால், நான் எதை வாஞ்சிக்கின்றேன் என்பதை அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தகப்பனானவர்: 'என் மகன் குறிப்பிட்ட அந்த பாடசாலையிலே படிக்க வேண்டும்' என்று திட்டமாக கூறினார். இப்போது அந்த தகப்பனானவர் தன் மனதிலிருப்பதை அறி ந்து கொள்ளும்படி 'ஏன் அல்லது எதற்காக' என்ற கேள்வியை திரு ம்பத் திரும்ப தன்னிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். 1. என் மகன் ஏன் அந்தக் குறிப்பிட்ட பாடசாலையில் தான் படிக்க வேண்டும்? பதில்: அங்கே பாடங்களை சிறப்பாக கற்பிக்கின்றார்கள். 2. ஏன் பாடங்களை சிறப்பாக படிக்க வேண்டும்? பதில்: சிறந்த புள்ளிகளுடன் பட்டம் பெற வேண்டும் 3: ஏன் பட்டம் பெற வேண்டும். பதில்: நல்ல உத்தியோ கத்திலே அமர வேண்டும். 4: ஏன் நல்ல உத்தியோத்திலே அமர வேண் டும்? பதில்: கைநிறைய உழைத்து, இந்த உலகிலே சந்தோஷமாக வாழ வேண்டும். படிப்பதிலும் உழைப்பதிலும் தவறில்லை ஆனால் படிப்பும் உழைப்பும் மனிதனுக்கு மெய்யான சந்தோஷத்தை தர முடி யுமா? புடிக்காதவர்கள் இந்த உலகத்திலே சந்தோஷமாக வாழ முடி யாதா? பாடுகளும் உபத்திரவங்களும் வாழ்க்கையை சூழ்ந்து கொள் ளும் போது, படிப்பும் உழைப்பும் அதை தீர்த்து வைக்க முடியுமா? என்பதைக் குறித்து வேத வார்த்தைகளின் வெளிச்சத்திலே அந்த தகப்பனார் தன் நோக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆடுகள் ஓநாய்களுக்குள்ளே வாழ்வதைப் போல நாம் இந்த உலகத்திலே பொல்லாப்புகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த உலகிலே நாம் எடுத்துக் கொள்ளும் தீர்மானம் ஒவ்வொன்றும் நம்மை நித்திய ஜீவனுக்கு அல்லது நித்திய ஆக்கினைக்கு ஒருபடி கிட்டவாகக் கொண்டு செல்லும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் கேட்டிற்கு தப்பித்துக் கொள்ளும்படிக்கு நான் அவைகளைக் குறித்து வினாவுள்ளவனா(ளா)க இருக்க பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:22