புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2021)

தீர்மானங்களின் அடிப்படைக் காரணி

கலாத்தியர் 6:8

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தி யஜீவனை அறுப்பான்.


நம்முடைய வாழ்க்கையிலே நாம் எடுக்கும் தீர்மானங்கள் யாவற்றிற்க்கும் பின்விளைவுகள் உண்டு. அது நன்மையான பலனையுடையதாக இருக்கலாம், அல்லது வாழ்வை பாதிக்கும் பின்விளைவுகளாக இருக்க லாம். நாம் ஒரு விதையை விதைக்கும் போது, அது முளைத்து, வளர் ந்து, அதன் பலனைக் கொடுப்பதற்கு பருவங்களும் காலங்களும் உண்டு. எனவே ஒருவன் எதை விதைக்கின் றான் என்பதைக் குறித்து கவனமுள் ளவனாக இருக்க வேண்டும். விதைப் பதற்கும் அறுப்பதற்கும் கால இடைவெளி இருப்பதால், சில வேளைக ளிலே மனிதர்கள் அறுவடை செய் யும் காலம் வரும்போது தாங்கள் தங்கள் இஷ;டப்படி விதைத்தவை களை மறந்து போய் விடுகின்றார்கள். அதாவது, நாம் இந்த உலகத்தின் போக்கில் நம்முடைய வாழ்வின் தீர் மானங்களை எடுத்தால், நாட்கள் கடந்து செல்லும் போது இந்த உலகத்திற்குரிய விளைச்சலையே பெற்றுக் கொள்வோம். நாம் தேவனுடைய வழிநடத்துதலின்படி தீர்மானங்களை எடுக்கும் போது, அங்கே அர்ப்பணிப்பும் கீழ்ப்படிதலும் உண்டு. அதனால் இந்த உலகத்திலே நன்மை கள் என்று கூறப்படுவைகளைக் கூட நாம் இழக்க நேரிடும்;;;ஆனால் அறு வடையின் நாள் வரும் போது அதன் முடிவு சமாதானத்தின் பலனை உண்டாக்கும். எனவே நீங்கள் எதை மையமாக வைத்து உங்கள் வாழ் வின் தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுகின்றீர்கள் என்பதைக் குறித்து நீங்கள் மிகவும் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்று இந்த உலகிலே பெரும்பான்மையான மனிதர்கள் பணத்தை மையமாக வைத்தே வாழ்வின் தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். அதை பெற்றுக் கொள்வதற்காக தங்கள் வாழ்வின் பல காரியங்களை மாற்றி யமைப்பதற்கும், இழந்து போவதற்கும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். அதனால் விளைச்சல் வரும் போது எதை மையமாக வைத்தார்களோ, அதற்குரிய விளைச்சலையே அவர்கள் கண்டு கொள்வார்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் தீர்மானங்களை எடுக்கும்படிக்கு தேவ ஆலோசனை யை நாடுங்கள். சில வேளைகளிலே தேவ ஆலோசனையானது உங்கள் எண்ணப்படி இருக்காது ஆனால் தேவ ஆலோசனையை மையமாக வைத்து தங்கள் முடிவுகளை எடுப்பவர்கள் பிதாவாகிய தேவனின் சித் தத்திற்கு தங்களை ஒப்புக் கொடுக்கின்றார்கள். முடிவிலே அதன் பலனாகிய நித்திய ஜீவனை அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நாட்கள் கொடியதாய் மாறிக் கொண்டிருக்கும் வேளையிலே, கிருபையின் நாட்களை நான் வீணடி க்காதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:17