புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2021)

தேவ சித்தம் எங்கே?

1 கொரிந்தியர் 12:18

தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத் தார்.


ஒரு சிறு பிள்ளையானவன், பாடசாலையொன்றிலே முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படும் போது, அவனுடைய பாட்டனார் அவனை நோக்கி: நீ வளர்ந்து வைத்தியனாக வரவேண்டும். அதுவே என் விரு ப்பம் என்று அவ்வப்போது கூறிக் கொண்டார். அவன் வளர்ந்து அத ற்குரிய பாடங்களை கற்று வைத்தியத்துறை பட்டப்படிப்பிற்காக பல்க லைக் கழகத்திற்கு செல்ல ஆயத்த ப்படும் போது, அவன் தகப்பனா னவர் அவனை நோக்கி: மகனே, நீ அந்த குறிப்பிட்ட ஊரிலுள்ள பல் கலைக் கழகத்திலே படிப்பதையே நாங்கள் விரும்புகின்றோம் என்றா ர்கள். அதன்படிக்கு அவன் அந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் படி த்து வைத்தியனானான். அவன் தாயார் அவனை நோக்கி: நீ அயல் நாட்டிலுள்ள பிரபல்யமாக அந்த மருத்துவமனையில் வேலை பார்ப்ப தையே நான் விரும்புகின்றேன் என்றாள். அவன் அந்த ஊருக்கு சென்று அங்கே வேலை பார்த்து வந்தான். தற்போது திருமணமாகும் நாட்கள் வந்ததும் அவன் தன் பெற்றோரை நோக்கி: நான் குறிப்பிட்ட பெண் ணையே திருமணம் செய்வதையே விரும்புகின்றேன் என்று கூறி குறி பிட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டான். குறிப்பிட்ட இந்த மனித னுடைய வாழ்விலே அவனது சிறு பிரயாயத்திலிருந்து பிதாவாகிய தேவனுடைய சித்தம் எங்கே? தாய், தந்தையர், சகோதர்கள், மனைவி, பிள்ளைகள் விருப்பங்களின்படி இந்த உலகிலே தேவனை அறியாத மனிதர்களும் தங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைவதற்கு அயராது உழைத்து அதை அடைந்து கொள்கின்றார்கள். அவர்கள் யாவரும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஞாயிறு ஆராதனையில் இரண்டு மணி நேரங்கள் மட்டும் தேவனுடைய சித்தத்தைப்பற்றி பேசிவிட்டு, பின்பு வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றிலும் மனிதர்கள் தங்களது விருப்பங்களை நடத்து வது தேவ சித்தமாகுமா? நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்த னியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவன் ஊழியங்களை மட்டுமா வேறுபிரித்தார்? ஒவ்வொரு மனிதனும் தேவன் குறித்த இடத்தில் நிற் காமல் போகும் போது அங்கே குழப்பங்கள் உண்டாகும். கண் இருக் கும் இடத்தில் காது இருக்க முடியுமா? அல்லது கையிருக்கும் இடத் தில் கால் இருந்தால் என்ன? பிரியமானவர்களே, நம்மு டைய வாழ் க்கை முழுவதும் நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றபடும் போது அங்கே பரிபூரண நிறைவு உண்டாகும்.

ஜெபம்:

இரக்கமுள்ள பரம தகப்பனே, என்னை நீர் படைத்த நோக்கத்தை நான் இந்தப் பூமியிலே நிறைவேற்றி முடிக்கத்தக்கதாக ஞானமுள்ள இருதயத்தை எனக்கு தந்து என்னை வழிநடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 15:13

Category Tags: