புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 25, 2021)

வாழ்க்கையின் அஸ்திபாரம்

மத்தேயு 7:24

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.


ஒரு ஐசுவரியமுள்ள மனிதனானவன், கடற்கரையொன்றிலிருந்து, சற்று நடை தூரத்திலே, ஒரு அழகான மாளிகையொன்றை கட்டினான். கட்டுமான பணிகள் யாவும் முடிந்த பின்பு, நாட்டின் சட்டப்படி, அந்தக் கட்டிடமானது பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிக்கின்றது என்ற சான்றிதழை பெற்றுக் கொள்ளும்படிக்கு அந்தக் மாளிகையின் அமை ப்பை சிபார்சு செய்யும்படி கட்டிட பொறியியலாளர் ஒருவர் அனுப்பப்ப ட்டார். அந்த கட்டிடத்தை சிபார்சு செய்த பொறியியலாளர், அந்த கட்டி டத்தின் அஸ்திபார வடிவமைப்பிலி ருந்து பல குறைபாடுகள் இருப்பதா கவும், இந்தக் கட்டிடம் இந்த பிராந்தி யத்தின் காலநிலைக்கு ஏற்றபடி அமை க்கப்படவில்லை என்றும் தெரிவித் தார். அதனால் அந்த அழகான மாளி கைக்கு பாதுகாப்பு சான்றிதழை வழ ங்குவதற்கு மறுப்பு தெரிவித்தார். பாருங்கள், அந்த ஐசுவரியமுள்ள மனிதன், கட்;டிடத்தை கட்டும் முன்பும், கட்டிடம் கட்டப்படுகின்ற போதும் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்ஏற்பாடுகளைச் செய்யாமல், எல்லாம் கட்டி முடிந்த பின்பு, சான்றிதழைப் பெற்றால் எல்லாம் சரியாகிவிடும் என்றிருந்தான். ஒருவேளை இந்த உலக ஐசுவரியத்தால் உலகிலே காரி யங்களை நடப்பித்து முடிக்கலாம். ஆனால் நம்முடைய வாழ்;க்கையா னது தேவ வார்த்தையின்படி கட்டப்படாதவிடத்து, தேவ அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள முடியாது. இயேசு சொன்னார்: நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனு ஷனுக்கு ஒப்பிடுவேன். அதாவது, தன் வாழ்விலே கடும் புயல் வந்தாலும் அவனுடைய வாழ்வு கர்த்தர் மேலே நிலைத்திருக்கும். நாம் விரும்பியபடி நம்முடைய வாழ்வை அமைத்துக் கொண்டு, பின்பு தேவனுடைய அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வேன் என்று ஒரு மனிதன் எண்ணுபவனாக இருந்தால், அவன் வாழ்வு கர்த்தர்மேல் நிலைத்திருக் காததால், சோதனையின் காலத்திலே விழுந்து போவான். எனவே, புத்தியுள்ள மனுஷனைப் போல, கர்த்தருடைய வார்த்தையின்படி உங் கள் வாழ்வாகிய வீட்டைக் கட்டுங்கள். கர்த்தரிலே நிலைத்திருப்பவன் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

ஜெபம்:

நிலையான வாழ்வின் வழியைக் காண்பித்த தேவனே, உம்மு டைய வழிகளை விட்டு விலகி இந்த உலகத்தின் வழிகளை நான் பின்பற்றி அழிந்து போகாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 128:1