புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2021)

என் கூப்பிடுதலை கேட்கும் தேவன்

சங்கீதம் 40:1

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.


சில வேளைகளிலே மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ தம்முடைய வாழ்வில் சுய விருப்பப்படி காரியங்களை செய்து விடுவதுண்டு. அதா வது சுய விருப்பதினால் தோல்வி ஏற்பட்டது என்பது பொருள் அல்ல. உதரணமாக, 1. ஒரு மனிதன் தன் இஷ;டப்படி வியாபாரத்தை ஆரம்பி த்தான். அந்த வியாபாரம் நன்றாக வளர்ந்து அவனுக்கு பெரும் ஆதாய த்தை கொடுத்தது. அதிக நேரத்தை அவன் அதிலே செலுத்தி வந்த தால், அவன் தன் ஆன்மீக தேவை களை மறந்து போனான். தன் மனக் கண்கள் இருளடைந்திருப்பதை அவன் உணராதவனாய் அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின் றான். உலகத்தின் பார்வையிலே அவன் வெற்றி பெற்றவனாக இருக் காலம். ஆனால் தேவனுடைய பார்வையிலே அவன் ஆத்துமா அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. அழிவை சந்திக்கும் வரைக்கும் அவன் தன் நிலையை அவன் உணராமல் வாழ்கின்றான். 2. இன்னுமொ ருவன் தன் இஷ;டப்படி ஆரம்பித்த வியாபாரம் பெரும் நஷ;டத்தை அவனுக்கு கொடுத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவன் மனம் தவித்துக் கொண்டிருக்கலாம். இப்படியாக மனிதர்கள் தேவனுக்கு சித்தமில்லாத: திருமணம், கல்வி, வேலை, வியாபாரம், நண்பர்கள், உறவுகள் போன்றவற்றில் சிக்கிக் கொண்டு வாழ்கின்றார்கள். இப்படி யாக சூழ்நிலைகளிலே அகப்பட்டு இனி என்ன செய்வது என்று தெரி யாது இருக்கின்றவர்கள் முதலாவதாக, இனி எடுக்கும் எந்த முடிவை யும் தங்கள் இஷ;டப்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருக்கும் நிலையிலே உங்கள் வாழ்க்கையை நியாயப்படு த்தாதபடிக்கு எந்த நிபந்தனையுமின்றி ஆண்டவர் இயேசுவிடம் உங் கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுங்கள். தீமைகளை நன்மையாக மாற்று கின்ற கர்த்தர், மனந்திரும்புகின்ற எந்த ஆத்துமாவையும் புறம்பே தள் ளுவதில்லை. கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள்.; அவர் உங்களிடமாய் சாய்ந்து, உங்கள் கூப்பிடுதலைக் கேட்பார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து உங்களைத் தூக்கியெடுத்து, உங்கள்; கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, உங்கள் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் உங் கள் வாயிலே கொடுப்பார். ஒன்றுக்கும் உதவாதோர் என்று அவர் ஒருவ ரையும் தள்ளிவிட மாட்டார்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உம்மை நம்பினோர் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. என் சூழ்நிலையிலிருந்து நீர் என்னை விடுவிக்கும்படி நான் பொறுமையோடு காத்திருக்க பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:6