புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2021)

நெருக்கப்படுகின்ற நேரங்களில்...

சங்கீதம் 9:9

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.


ஒரு ஊரிலே இருந்த குடியானவன் ஒருவன், ஊரிலுள்ள பெரிய பண் ணையொன்றிலே வேலை செய்யும்படி தினமும் சென்று வருவான். அங்கு வேலை செய்யும் வாலிபர்கள் இந்தக் குடியானவனை கேலி செய்வது வழக்கமாக இருந்தது. குடியானவனும் 'தன்னுடைய கோபம் தன் குடும்;பத்தை பட்டினியில் போட்டுவிடும்' என்று உணர்ந்த வனாய் அவர்கள் சொல்லும் நிந்தைகளை யும் ஏளனமான வார்த்தைகளையும் பொருட்படுத்தாது, எல்லாவற்றை யும் படைத்தவர் பார்த்துக் கொண்டி ருக்கின்றார் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு பொறுமை யோடு தன் வேலைகளை செய்து வந்தான். இன்றும் வேலை செய்யும் இடங்களிலே நெருக்கங்கள் ஏற்ப டும் போது, மனிதர்கள் தீவிரமாகத் தீர்மானங்களை எடுத்துக் கொள்கின் றார்கள். ஒன்றில் வேலை செய்யும் இடம் தங்கள் விருப்பப்படி மாற் றப்பட வேண்டும் அல்லது இன்னுமொரு வேலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். பிரியமானவர்களே, வேலைஸ்தலத்தில் மட்டுமல்ல, எந்த இடத்திலும், நெருக்கங்கள் ஏற்படும் போது நாம் தேவனுடைய கட்டளைகளை மறந்து விடக்கூடாது. 1. நான் சொல்வதும் செய்வதும் சரி என்னும் பெருமையுள்ள சிந்தையை என்னைவிட்டு அகற்றி, தேவனுடைய சமுகத்திலே என்னைத் தாழ்த்த வேண்டும். 2. நான் திருந்த வேண்டிய இடங்கள் உண்டா? என்று ஆராய்ந்து பார்த்து என் வழியை தேவனுக்கு பிரியமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் 3. என்னுடைய கோபம் தேவ நீதியை நடப்பிக்காது மாறாக என்னுடைய வாழ்வின் சமாதா னத்தை குலைத்துப் போடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 4. தேவ நீதி என்னில் நிறைவேற இடங் கொடுக்க வேண்டும். 5. பின்பு நிதானமுள்ளவர்களாக தீர்மானங்களை எடுக்க வேண்டும். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ளவர் களுக்கோ கிருபை அளிக்கின்றார். கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், தேவன் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாயிருக்கின்றார். மூடர்கள் தங்கள் மதியீனத்திலே உங்களை ஒடுக்கும்போது, நீங்களும் மதியீனரைப்போல நடந்து கொள்ளாமல், தேவ நீதி நிறைவேறும்படி தேவ கட்டளைக்குள் அடங்கியிருங்கள்.

ஜெபம்:

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமான தேவனே, உலக நீதிக் கும், சுயநீதிக்கும் நான் அடிமையாகாதபடிக்கு, தேவ நீதி என் வாழ்வில் நிறைவேறும்படி உம் வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 14:9