புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2021)

வாழ்வின் முக்கிய தீர்மானங்கள்

சங்கீதம் 112:1

அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


ஒரு வாலிபனானவன் தான் விரும்பிய பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ளும்படியாக இருவரும் திருமணப்பதிவை ஒழுங்கு படுத்து ம்படி சென்றிருந்தார்கள். அவர்கள் வசிக்கும் நாட்டின் சட்டப்படி அவ ர்கள் திருமணப்பதிவு செய்வதற்கு முன்பாக சில ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று சட்டஅதிகாரி ஒருவர் அறிவுரை கூறினார். மறு பேச்சு இல்லாமல் அவர்கள் அந்த ஒழுங்கு முறைகள் யாவையும் செய்து முடித்தார்கள். திருமண விழாவிற்குரிய ஆயத்தங்களை செய்ய முற்பட்ட போது, மண்டபத்தின் உரிமையாளர் கள் இந்த நேரத்திற்கு விழா ஆரம் பித்து இந்த நேரத்தில் முடிவடைய வேண்டும் என்றும் தாங்கள் அதை கண்டிப்பாக கடைப்பிடிப்போம் என்று முன் எச்சரிப்பை வழங்கினார்கள் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு மண்டப வாடகைக்குரிய பணத்தை செலு த்தினார்கள். இப்படியாக இந்த உலகத்திலுள்ள அதிகாரபூர்வமான சட் டங்களுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் திருமணத்தின் பல மாதங்களு க்கு முன்னதாகவே தங்களை கீழ்ப்படுத்தி பணிந்து கொண்டார்கள். இப் போது திருமணம் செய்து கொள்ள சகல ஆயத்தங்களும்; ஏற்பாடுகளும் செய்யப்பட்டாயிற்று. தற்போது அவர்கள் போட்டுக் கொண்ட திட்டத்தை தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். பின்பு நாட்கள் சென்று தம்பதிகளுக்கிடையிலே வேற்றுமைகள் உண்டாகும் போதும், அதை தேவ வார்த்தையின்படி தங்கள் வேற்று மைகளை மாற்றிக் கொள்ளாதபடிக்கு, தங்கள் விருப்பப்படியே திரு மண ஒப்பந்தங்களை உடைத்துப் போடுகின்றார்கள். பிரியமானவர்களே, 'அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிக வும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.' என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. வீட்டைக் கட்டுகின்றவர்கள் முத லாவதாக உறுதியான அஸ்திபாரத்தை போடுகின்றார்கள். ஒருவன் தேவ ஆசீர்வாதத்தை வாஞ்சிக்கின்றவனாக இருந்தால், அவன் தன் வாழ்க் கைத் துணை யாரென்று தீர்மானம் செய்யும் முன்னதாகவே, வாழ்வின் அஸ்திபாரமாகிய தேவனுடைய கட்டளைகளின்படி அவன் தன் தீர்மான த்தை எடுத்துக் கொள்வான். அந்த வேளையிலேயே தேவனுடைய வாக் குத்தத்தத்தின் ஆசீர்வாதங்கள் யாவும் அவனுக்குரியதாக மாறுகின்றது.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, நான் என் வாழ்வில் சாபத்திற்குரியவைகளை தெரிந்து கொள்ளாதபடிக்கு, உம்முடைய வார்த்தைகளின்படி தீர்மானங்களை எடுக்க ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 1:7