புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 21, 2021)

சுய பிரமாணங்களா தேவ பிரமாணங்களா?

2 நாளாகமம் 20:6

உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது.


ஒரு வீட்டின் சொந்தக் காரன் தன் வீட்டின் கதவுகளையும், ஜன்னல்;க ளையும் அதன் நிலைகளிலே பூட்டும்படியாக ஒரு தச்சனை கூப்பிட்டிரு ந்தான். அந்த மனிதனானவன் தச்சனை நோக்கி: இந்த அழகான வேலை ப்பாடுகலுள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் நீ அதன் நிலைகளிலே பூட்டி விடு என்று கூறினான். கதவுகளையும், ஜன்னல்களையும் அதன் நிலைகளையும் அளவெடுத்த தச்சன் கத வுகளும், ஜன்னல்களும் அதன் நிலை களிலே சரியாக பொருந்தாதிருப்பதை கண்டு கொண்டான். அவன் அந்த வீட்டு சொந்தக்காரனை நோக்கி: ஐயா, இந்த கதவுகளும், ஜன்னல்களும், உங்கள் வீட்டிலே போட்டிருக்கும் கதவு, ஜன் னல் நிலைகளின் கட்டமைப்புக்கு செய் யப்படவில்லை. இந்தக் கதவுகளும் ஜன் னல்களும் நிலைகளின் கட்டமைப்புக்கு பொருந்தாது. அதே வேளையில் இந்த கதவுகளையும் ஜன்னல் கதவுக ளையும் சற்று வெட்டினால் அதன் வேலைப்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறினான். அதற்கு அந்த வீட்டுக்காரன்: அது எனக்குத் தெரியும், நீ எப்படியாவது, அந்தக் கதவுகளையும் ஜன்னல்களையும் வெட்டாமல், வீட்டின் நிலைகளின் கட்டடமைப்புகளை கதவுகளின் அளவுப்பிரமாண த்திற்கு அமைய வெட்டி, எப்படியாவது கதவுகளை நிலைகளில் பூட்டி விடு என்று கூறனான். பிரியமானவர்களே, வீட்டின் நிலைகளின் கட்ட மைப்பின் அளப்பிரமாணத்திற்கு ஏற்றபடி கதவுகளை வாங்குவதா? அல் லது அளவுப் பிரமாணமற்ற கதவுகளை வாங்கி, வீட்டின் நிலைகளின் கட்டமைப்பை மாற்றுவதா? நித்திய ஜீவனைத் தரும் தேவ பிரமாண ங்களாகிய அளவுப் பிரமாணத்தின்படி நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைப்பதா? அல்லது நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்றதாக தேவ பிரமாணங்களை மாற்றிக் கொள்வதா? சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்றபடியான சபையையும், தங்கள் வாழ்க்கை முறைமைகளுக்கு ஏற்றபடி போதிக்கும் ஊழியர்க ளையும், தங்கள் வாழ்வின் முறைமைகளை ஆதரிக்கும் சக விசுவாசிக ளையும் தேடுகின்றார்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையை யாரால் மாற்ற முடியும்? அவருடைய நியமங்களை வியர்த்தமாக்கக்கூடியவன் யார்? ஒருவரும் அதை செய்யக் கூடாது. எனவே, அழிந்து போகாதபடிக்கு தேவனுடைய பிரமாணங்களின்படி உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவ வார்த்தைகளை எமக்குத் தந்த தேவனே, அந்த வார்த்தைகளை நான் பற்றிக்கொண்டு அதன்படி என் வாழ்க்கை முறைமைகளை மாற்றிக் கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 14:24