புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 20, 2021)

ஆழமான வேத அறிவு?

2 தீமோத்தேயு 3:17

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதி யைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.


ஒரு சுகாதார திணைக்களத்திலே அதிகாரியாக வேலை பாரக்கும் ஒரு மனிதனானவன், பிறந்தின தின விழாவொன்றிலே சமுகம் தந்திருந்த சில நண்பர்கள் அயலவர்களோடு தன் வேலையைக் குறித்து பேசிக் கொண் டிருந்தான். சில உணவுச் சாலைகள் சுகாதரத்தை பேணுவதில்லை. அப்படியாக சுகாதாரமற்றதும், பொது மக்களை பாதிக்கும் வியாபார நிலை யங்களை எப்படியாக இணங்கண்டு, அவர்களுக்குரிய அபராதத்தை விதி க்கின்றோம் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியப்படும்படி விளக்கிக் கூறினான். மிகவும் அரு மையாகவும் தான் பேசுகின்ற காரிய த்தைக்குறித்து அறிவுள்ளவனாகவும் அவன் காணப்பட்டான். அங்கிரு ந்த யாவரும் அவன் செய்யும் தொழி லையும் அதன் பயன்பாட்டையும் குறித்து மெச்சிக் கொண்டார்கள். சற்று நேரம் கழிந்த பின்பு, அதே மனிதனானவன் புகைப்பதாலும், மதுபானம் அருந்துவதாலும், தனி மனிதனுக்கும், குடும்பத்திற்கும், சமுகத்திற்கும் ஏற்படும் பாதிப்பைக் குறித்து பேச ஆரம்பித்த போது, அவ்விடத்திலி ருதவர்கள் பலர், இவன் புறம்போக்கானவன் என்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்கள். பிரியமானவர்களே, இன்று பலருடைய நிலைமை இப்படியாகத்தான் இருக்கின்றது. அதாவது, வேதத்தைக் குறித்தும், அதன் அதிசயத்தை குறித்தும் ஆழமாக பேசுங்கள். நோவா, யோசேப்பு, தானியேல், யோபு, தாவீது, ஸ்தேவான் மற்றும் யோசபேல், யூதாஸ், அனனினா சப்பிராள் போன்ற பல பாத்திரங்களைக் குறித்து தாராளமாக பேசுங்கள் ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் வேத வார்த்தைகளை புகுத்த வரவேண்டாம் என்று கூறிக் கொள்கின் றார்கள். வேதத்தை ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும். 'உன்னைப் போல உன் அயலானையும் நேசி' இது யாரால், யாருக்கு, எப்போது கூறப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெரியது. ஆனால் உன் பக்கத்து வீட்டுக் காரனை பழி வாங்காமல், மன்னித்துவிட வேண்டும் என்று கூறுவதை கேட்கவும், சிந்திக்கவும் விருப்பமுமில்லை, நேரமுமில்லை. நாம் அப்படியிருத்தலாகாது. வேத த்தை நாம் வாசிக்கும் போது, அந்த வார்த்தைகளுடன் நம்முடைய வாழ்வை குறித்த தியானமும் அதனுடன் இசைந்திருக்க வேண்டும். இப்படியாக நாளுக்கு நாள் நம்முடைய வாழ்வு மறுரூபமாக வேண்டும்.

ஜெபம்:

உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள் என்ற தேவனே, உம்முடைய வசனம் எப்போதும் என் வாழவின் வெளிச்சமாக இருக்கும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 13:5